என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camping"

    • தொண்டி அருகே மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • முகாமில் 230 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தேளுர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர் முன்னிலை வகித்தார். திருவாடானை தாசில்தார் செந்தில்வேல்முருகன் வரவேற்றார்.

    சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கந்தசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குருச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட நல தாசில்தார் சாந்தி, திரு வாடானை யூனியன் சேர்மன் முகமது முக்தார் உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 230 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மாற்றுத்திறனாளிகள், முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கணிணி திருத்தம், விலையி ல்லா தையல் எந்திரம், விலையில்லா பேட்டரி மருந்து தெளிப்பான், காய்கறி விதைகள், மின்னணு குடும்ப அட்டை ஆகியவை வழங்கப்பட்டன.

    வருவாய் துறை, பேரிடர் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுபான்மை துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தோட்டக்கலைத்துறை, உணவுப்பொருட்கள் வழங்கல் துறை, மின்துறை, வனத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் தேளுர் பஞ்சாயத்து தலைவர் நன்றி கூறினார்.

    • திட்டு கிராமமக்கள் வசிக்க 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்.
    • 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    சீர்காழி:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு துறைமுகத்தை ஒட்டி வங்க கடலில் கலந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலுக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் சென்று கொண்டிருக்கும் நிலை இருந்து வந்தது.

    கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் சூழலில் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டு முன்னெச்ச ரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் வீடுகளு க்கு நேரில் சென்று மேடான இடங்களில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் லலிதா நிருபர்களி டம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் 1.85 லட்சம் கன அடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிகப்படியான வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால் படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதால் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஆற்றின் கரையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை பலபடுத்தும் பணிகளுக்காக 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    மீட்பு பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

    சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, மயிலாடுதுறை கீழ்க்காவிரி வடிநிலக்கோ ட்ட செயற்பொறியாளர் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி டி ஓ அருள்மொழி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், விஏஓ சங்கீதா மற்றும் அதிகாரிகள், பேரிடர் மீட்பு குழுவினர் உடன் இருந்தனர்.

    • திட்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • ஆச்சாள்புரம் கிராமத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு உணவு தரம் குறித்து கேட்டறிந்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் தண்ணீர் சூழ்ந்துள்ள திட்டு கிராமங்களான நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    கண்காணிப்புஅலுவ லரும், குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்இயக்குநருமான அமுதவல்லி அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்த ப்பட்டு வரும் பணி மற்றும் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் முகாமில் தங்க வைக்கப்பட்டு ள்ளவர்க ளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு சமைக்கப்படும் உணவு தரம் உள்ளதாக இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார். மயிலாடு துறை கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் முருகண்ணன், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பிடிஓ சரவணன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • விதை உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது.
    • மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி விளக்கம் அளித்தார்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள விநாயகபுரத்தில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் விதைப்பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி குறித்து மாவட்ட அளவிலான பயிற்சிமுகாம் நடந்தது. நாவினிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, உறங்கான்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 40 விதைப் பண்ணை உற்பத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி விளக்கம் அளித்தார். வேளாண் துணை இயக்குனர் அமுதன், நுண்ணுயிர் பாசன திட்ட அலுவலர் சரவணன், உதவி இயக்குனர் சிங்கார லீனா, விதைச்சான்று அலுவலர் சுஜிதா, துணை வேளாண் அலுவலர் தனலட்சுமி, உதவி விதை அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வட்டாரம் வில்லிபாளையம் கிராமத்தில் நடமாடும் மண்பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
    • நீர் மாதிரிகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:- பரமத்தி வட்டாரம் வில்லிபாளையம் கிராமத்தில் நடமாடும் மண்பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

    அது சமயம் வில்லிபாளையம் ஊராட்சி, ஜங்கமநாய்க்கன் பட்டி, குச்சிப்பாளையம் கிராமம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மண் மற்றும் நீர் மாதிரிகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தர்ராஜன் மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு ஆகியோர் "மண் மற்றும் நீர் மாதிரி எடுக்கும் முறை, மண் மற்றும் நீர் பரிசோதனையின் மூலம் பெறப்படும் பலன்கள், மண்வள அட்டையின் சாராம்சம் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.

    மேலும் விபரங்களுக்கு பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதியை தொடர்பு கொண்டு பயன் பெறமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் கொண்டரசம்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்றது.
    • அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வட்டாரம், சித்தம்பூண்டி, கொண்டரசம்பாளையம் கிராம கரும்பு விவசாயிகளுக்கு 'நீடித்த நிலையான கரும்பு சாகுபடி'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சியில் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, கரும்பில் இருந்து சர்க்கரை மட்டும் தயாரித்த காலம் போய் தற்போது கரும்புச்சாறு கழிவில் மொலாசஸ், சாக்லெட் மற்றும் கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம், இயற்கை உரம், காகிதம் என கரும்பின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. குறைந்த அளவு விதை நாற்று, குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை பயன்படுத்தி பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பொன்னி சுகர்ஸ் நிறுவன கரும்பு ஆய்வாளர் பழனிச்சாமி, மற்றும் மேலாண்மை அலுவலர் அல்லிமுத்து ஆகியோர் பயிற்சி வழங்கினர். பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் கௌசல்யா, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் 15-வது பட்டாலியன் என்.சி.சி. சார்பில் உலக யோகா தினத்தை–யொட்டி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • உலக சமாதான ஆலயம் சார்பில் 10 நாட்கள் இலவச யோகாசன முகாம் நேற்று தொடங்கியது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 15-வது பட்டாலியன் என்.சி.சி. சார்பில் கமாண்டிங் அலுவலர் அணில்வர்மா, நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதலில் உலக யோகா தினத்தை–யொட்டி என்.சி.சி. மாணவர்கள் யோகா சிறப்பு முகாம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் ஈஸ்வர், புருஷோத்தமன் , கல்லூரி முதல்வர் பாலமுருகன் வாழ்த்தி பேசினார்கள். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவ, மாணவியர்கள் 220 பேர் பங்கேற்றனர். என்.சி.சி. அலுவலர்கள் அந்தோணிசாமி, பிரபுதாஸ், முருகேஸ்வரி, சிவகுமார், ரமேஷ்குமார், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    உலக சமாதான ஆலயம் சார்பில் 10 நாட்கள் இலவச யோகாசன முகாம் நேற்று தொடங்கியது. முகாமை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தொடங்கி வைத்தார். சப்- இன்ஸ்பெக்டர் மலர்விழி குத்துவிளக்கேற்றினார். தொழிலதிபர்கள் இளங்கோ, சிவக்குமார் உள்பட வாழ்த்தி பேசினர்.

    அரசு பி.எட்.கல்லூரியில் யோகா தினத்தையொட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது. யோகா தினத்தையொட்டி நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி செய்தனர்.

    நகராட்சி நடுநிலைப்பள்ளியில் யோகா பயிற்சி முகாம் தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது.

    ×