search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளிடம் கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு
    X

    கொள்ளிடம் கரையோர பகுதிகளில் கலெக்டர் லலிதா ஆய்வு.

    கொள்ளிடம் கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆய்வு

    • திட்டு கிராமமக்கள் வசிக்க 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்.
    • 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    சீர்காழி:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு துறைமுகத்தை ஒட்டி வங்க கடலில் கலந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலுக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் சென்று கொண்டிருக்கும் நிலை இருந்து வந்தது.

    கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் சூழலில் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டு முன்னெச்ச ரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் வீடுகளு க்கு நேரில் சென்று மேடான இடங்களில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் லலிதா நிருபர்களி டம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் 1.85 லட்சம் கன அடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிகப்படியான வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால் படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதால் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஆற்றின் கரையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை பலபடுத்தும் பணிகளுக்காக 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    மீட்பு பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

    சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, மயிலாடுதுறை கீழ்க்காவிரி வடிநிலக்கோ ட்ட செயற்பொறியாளர் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி டி ஓ அருள்மொழி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், விஏஓ சங்கீதா மற்றும் அதிகாரிகள், பேரிடர் மீட்பு குழுவினர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×