என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வேளாண்மை விழிப்புணர்வு மக்கள் பங்கேற்பு கூட்டம்
  X

  கூட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்ற விவசாயிகள்.

  வேளாண்மை விழிப்புணர்வு மக்கள் பங்கேற்பு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அயோத்தியாப்பட்டணம் அருகே வேளாண்மை விழிப்புணர்வு மக்கள் பங்கேற்பு கூட்டம் நடைபெற்றது.
  • வேடப்பட்டி சுற்று–வட்டார கிராமங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

  வாழப்பாடி:

  சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் பள்ளிப்பட்டி, அனுப்பூர், கருமாபுரம்,மின்னாம்பள்ளி, பூவனூர் பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், செயல்படுத்தப்–பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான மக்கள் பங்கேற்பு மதிப்பாய்வு கூட்டம் வளையக்காரனூர் கிராம பொது சேவை மையத்தில் நேற்று நடைபெற்றது.

  இக்கூட்டத்திற்கு அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண்மை ஆத்மாக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

  வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மைத் திட்டம், வேளாண்மை பொறியியல் துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறை திட்டங்கள், விவசாயிகளுக்கான அரசு மானியத் திட்டங்கள் மற்றும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கந்தசாமி, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், துவரை சாகுபடி மற்றும் சோயா பீன்ஸ் சாகுபடி தீவிரப்படுத்தல் திட்டம் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குநர் சரஸ்வதி விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

  காய்கறி பயிர்களை இயற்கை விவசாயம் முறையில் சாகுபடி செய்யும் தொழில்நுட்பம், இயற்கை விவசாயச்சான்று பெறும் முறை மற்றும் தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி தோட்டக்கலை உதவி அலுவலர் ஷர்மிளா விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

  தரிசு நிலங்களை கண்டறிந்து விலை நிலங்களாக மாற்றுதல், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்தல், வேளாண்மையில் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் பற்றியும், கிராம ஊராட்சிகளில் உள்ள இயற்கை வளங்கள் அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் தேவைகள் பற்றியும் விவசாயிகளுடன் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்துரையாடினர்.

  இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார், அட்மா திட்ட உழவர் செந்தில் , துணை வேளாண்மை அலுவலர் திருநாவுக்கரசு, உதவி வேளாண்மை அலுவலர் சேட்டு உள்ளிட்டோர் செய்திருந்தனர். வளையக்கா–ரனூர், வேடப்பட்டி சுற்று–வட்டார கிராமங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

  Next Story
  ×