search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் உதவி தொகை பெற பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்
    X

    விவசாயிகள் உதவி தொகை பெற பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்

    • ரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ 6000 பெற பதிவு செய்தவர்கள் மற்றும் தங்கள் வங்கிக் கணக்கில் மேற்கண்ட நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.
    • தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண் வங்கி கணக்கு எண் நில உடமை ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் (அடங்கல் தேவையில்லை) எடுத்து சென்று பொது சேவை மையங்களில் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ 6000 பெற பதிவு செய்தவர்கள் மற்றும் தங்கள் வங்கிக் கணக்கில் மேற்கண்ட நிதியினை பெற்று வருபவர்கள் உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.

    தங்கள் பதிவினை புதுப்பித்தல் மூலம் தாங்கள் தொடர்ந்து இந்த நிதியை பெற இயலும்.

    புதுப்பிக்க தவறிய வர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும். தங்களது பதிவினை புதுப்பிக்க ஆதார் எண் வங்கி கணக்கு எண் நில உடமை ஆவணங்கள் ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் (அடங்கல் தேவையில்லை) எடுத்து சென்று பொது சேவை மையங்களில் உடனடியாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    வங்கி கணக்குடன் ஆதார் எண் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்கள் தற்பொழுது இணை த்துக்கொ ள்ளலாம்.

    பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ளது. தனியார் பொது சேவை மையங்களிலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மனுதாரர் பெயரில் சிட்டா இருக்க வேண்டும் கூட்டுபட்டாவாகவும் இருக்கலாம்.

    குத்தகை போக்கிய நிலங்கள் பதிவு புதுப்பிக்க இயலாது. மனுதாரர் பதிவை புதுப்பிக்க பொது சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டும். ஒருவர் பெயரில் இருப்பதை மற்றவர்கள் புதுப்பிக்க இயலாது.

    கைரேகைவைக்க வேண்டும். இந்த செய்தி யினை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உரிய காலத்திற்குள் பதிவினை புதுப்பித்து நிதி உதவியினை தடங்கலின்றி தொடர்ந்து பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×