search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் பலி"

    • கடந்த சில நாட்களாக மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
    • ராட்சத அலையில் சிக்கி மீனவர் நரேந்தர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சின்ன குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் நரேந்தர் (வயது 21). மீனவர். இவர் உறவினர்களான நரேஷ், சுரேந்தர் ஆகியோருடன் கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றார்.

    கடந்த சில நாட்களாக மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கடலில் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இந்த நிலையில் ராட்சத அலையில் சிக்கி மீனவர் நரேந்தர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. இதில் நரேந்தரின் தலையில் படகின் என்ஜின் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடன் இருந்தவர்கள் மீண்டும் படகை இயக்கி உயிருக்கு போராடிய நரேந்தரை மீட்டு கரைக்கு வந்தனர். பின்னர் நரேந்தரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேசன் (28), இவர் வாய் பேச முடியாதவர். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
    • நேற்று முன்தினம் இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் வெங்கடேசன் (28), இவர் வாய் பேச முடியாதவர். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதியது.
    • விபத்தில் ராஜவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேலு (வயது 30).

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஒரத்தூர் மெடிக்கல் காலேஜ் ரோடு அருகே செட்டிச்சேரி என்ற இடத்தில் வந்த போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதியது.

    இந்த விபத்தில் ராஜவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜவேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அருகே காதர்பேட்டை கவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மகன் அம்ஜத் பாஷா (வயது 29) இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே புதூர் ரெயில்வே கேட் என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அம்ஜத் பாஷா மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்ஜத் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலையில் சாப்பிடாமல் சென்றதால் பரிதாம்
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள நவக்கரையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28).

    இவர் வாரந்ேதாறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அதன்படி நேற்று விடுமுறை நாள் என்பதால் தினேஷ்குமார் நண்பர்க ளுடன் கிரிக்கெட் விளை யாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் சாப்பிடாமல் பந்து வீசினார். திடீரென வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தினேஷ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள தால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

    இதனையடுத்து தினேஷ்குமாரை அவரது நண்பர்கள் மதுக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தினே ஷ்குமார் இறந்து விட்டதாக கூறினார். இதனை கேட்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇட த்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    • நேற்று தனது இருசக்கர வாகனத்தில் முத்துநாயக்கன்பட்டி சாலையில் இருந்து நல்லா கவுண்டம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு பெரிய பச்சையாக கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டேண்டை சரியாக எடுக்காமல் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நல்லகவுண்டம்பட்டி 3-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஜீவானந்தம் (32), இவருக்கு திருமணமாதாக நிலையில் பெற்றோர் பெண் பார்த்து வந்தனர்.

    ஸ்டேண்டை எடுக்காமல்...

    இந்த நிலையில் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் முத்துநாயக்கன்பட்டி சாலையில் இருந்து நல்லா கவுண்டம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு பெரிய பச்சையாக கோவில் வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டேண்டை சரியாக எடுக்காமல் வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. சைடு ஸ்டேண்ட் கீழே உரசியதால் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடி பட்டு உயிருக்கு போராடினார்.

    பரிதாப சாவு

    இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகமே சோகத்தில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் சதீஷ் என்ற கபாலி (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் புறாக்களை வளர்த்து வருகிறார்.

    இவரது வீட்டையொட்டி பொன்னுசாமி வீதி உள்ளது. இதன் அருகே மின் டிரான்ஸ்பார்மரும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் வளர்க்கும் புறா ஒன்று பொன்னுசாமி வீதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உட்கார்ந்து இருந்தது. எங்கே மின்சாரம் தாக்கி இறந்து விடுமோ என்ற பயத்தில் புறாவை காப்பாற்ற சதீஷ் முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் கைபட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னா் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தையடுத்து கடந்த 30-ம் தேதி பொன்னுசாமி வீதியில் பாதாள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நீரூற்று நிலையத்தால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், மின் டிரான்ஸ்பார்மர் அடிக்கடி வெடித்து வருதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி இதனை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
    • திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    திருத்தணி, காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது27).பூ கட்டும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன், திருமால், பரமு ஆகியோருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் திருவள்ளூர் நோக்கி சென்றார். திருவாலங்காடு அருேக நாகாத்தாங்கல் என்ற இடத்தில் சென்றபோது திருவாலங்காடு நோக்கி வந்த அரசு பஸ் திடீரென கார் மீது மோதியது. இதில் குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இவர்களில் பலத்த காயம் அடைந்த குமார் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • செல்வக்குமார் தனது நண்பர்களுடன் ஊத்துக்குளி வழியாக செல்லும் ஆற்றில் குளிக்க சென்றனர்.
    • செல்வகுமாருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார்.

    கோவை,

    திருப்பூர் அருகே உள்ள கரட்டூரை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 21). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அவரது நண்பர்களான சபரிகிரி (25), அருண்குமார் (25) ஆகியோருடன் ஆழியாறு அருகே உள்ள பூவல்லபருத்தியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அங்கு வைத்து மது குடித்தனர். பின்னர் 3 பேரும் குளிக்க முடிவு செய்தனர். அதன்படி 3 பேரும் ஜமீன் ஊத்துக்குளி வழியாக செல்லக்கூடிய ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது செல்வகுமார் ஆழமான பகுதிக்கு சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்று நீர் அவரை அடித்து சென்றது. அப்போது அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் செல்வக்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது நண்பர்கள் பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட செல்வக்குமாரின் உடலை தேடினர்.

    பின்னர் போலீசார் ராமர்கோவில் வீதி உள்ள பகுதியில் இருந்து உடலை மீட்டனர். இதனையடுத்து போலீசார் செல்வக்கு மாரின் உடலை பிரேத பரிசோ தனைக்கு பொ ள்ளாச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பொள்ளா ச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியல் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கீழ்கொத்தூர், கண்ணப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 32). இவர் நேற்று முன்தினம் பின்னத்தூரில் இருந்து ஒடுக்த்தூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகாந்த் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியல் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கீழ்கொத்தூர், கண்ணப்ப கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 32). இவர் நேற்று முன்தினம் பின்னத்தூரில் இருந்து ஒடுக்த்தூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

    அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகாந்த் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராகுல் டி.நாயர் எா்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • கடந்த 21-ந்தேதி ராகுலுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோட்டயம் மாவட்டம் தீக்கோயி பகுதியை சேர்ந்தவர் ராகுல் டி.நாயர் (வயது 22). இவா் எா்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 18-ந்தேதி ராகுல் மாவேலிபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து ஷவர்மா (இறைச்சி உணவு) ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

    மறுநாள் காலையில் அவருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டு உள்ளது. இதற்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் கடந்த 21-ந்தேதி ராகுலுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    ×