search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுதிறனாளி"

    • வெங்கடேசன் (28), இவர் வாய் பேச முடியாதவர். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
    • நேற்று முன்தினம் இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் வெங்கடேசன் (28), இவர் வாய் பேச முடியாதவர். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • கோவை அரசு ஆஸ்பத்திரி மீது குற்றச்சாட்டு
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    கோவை, 

    கோவை அடுத்த கணபதியை சேர்ந்தவர் பாபு (வயது 45). மாற்றுத்திறனாளி. இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்.

    இதனையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டார். அவர்கள் ஸ்கேன் செய்ய முன்பதிவு செய்த பின் சில நாட்கள் ஆகும் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த பாபு இன்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விவரத்தை கேட்டு அறிந்தனர். பின்னர் போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார். 

    • மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பஸ் நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும்.
    • எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    பஸ்களில் மாற்றுத் திறனாளிகளை பயணிக்க அனுமதித்து, எந்தவித புகாரும் வராத வகையில் பணிபுரிய வேண்டும் என நடத்துநர், ஓட்டுநர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளருக்கு 75 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டு, அதற்கான கட்டணம் அரசிடம் இருந்து நிலுவையின்றி பெறப்படுகிறது.

    மேலும், அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் இருக்கையில் மட்டும் அமர்ந்து பயணிக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்த பஸ்களில் மாற்றுத்திறனாளிகளை பயணிக்க அனுமதிப்பதில்லை எனவும் இருக்கை உடனடியாக வழங்கப்படாமல் தாமதப்படுத்துவதாகவும் புகார் பெறப்படுவதாக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பஸ் ஓட்டுநர், நடத்துநர்கள் இடையே தேவையற்ற பிரச்சினை ஏற்படுவதுடன் பொது மக்கள் மத்தியில் நிர்வாகத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுவதாகவும், இதைத் தவிர்க்கும் பொருட்டு, விரைவு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதோடு, மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பஸ் நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்றும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாகவும், தக்க மரியாதையுடனும் கவுரவத்துடனும் பயணிக்க உதவி புரிவது நமது கடமை. இனி வரும் காலங்களில் குளிர்சாதன பேருந்துகள் தவிர்த்து (தமிழகத்துக்குள் மட்டும்) இதர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளரை பயணிக்க அனுமதி அளித்து எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    • மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .
    • இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலை அடுத்துள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .

    இவருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார். மனுவை பெற்று மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலமாக ரூ.11 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியினை மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வழங்கினார்.     அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மாற்றுதிறனாளி கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் களமிறங்கும் வீரருக்கு அமைச்சர் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது.
    • தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கீழசெல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்பாபு(29). இவர் சிறுவயது முதல் மாற்றுத்திறனாளிக்கான சக்கர நாற்காலியில் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் கொண்டு தமிழக அளவில் விளையாடி பல பரிசுகளை பெற்றுள்ளார். தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். வருகிற 26-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகக்கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் இந்தியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இந்தியா சார்பில் வினோத்பாபு தலைமையில் இந்திய அணி கலந்து கொள்கிறது. வறுமையில் வாடும் வினோத்பாபுவுக்கு லண்டன் செல்ல முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் உதவி கேட்டார்.

    உடனடியாக அவர், முதுகுளத்தூர் சட்ட மன்ற அலுவலகம் மூலம் வினோத்பாபுவின் ஊருக்கு சென்று நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து வினோத்பாபுவிற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நிதியுதவியை தி.மு.க. கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல் வழங்கி விளையாட்டில் வெற்றி பெற வாழ்த்தினார். அப்போது முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன், டோனி, ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×