search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenage sacrifice"

    • வெங்கடேசன் (28), இவர் வாய் பேச முடியாதவர். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.
    • நேற்று முன்தினம் இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் வெங்கடேசன் (28), இவர் வாய் பேச முடியாதவர். கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உடல் நிலை மிகவும் மோசமானதால் ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • சித்திக் கடலூர் முதுநகரில் தங்கி டிராவல்ஸ் ஒன்றில் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
    • சித்திக் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    திருச்சி லால்குடியை சேர்ந்தவர் சித்திக் (வயது 28). இவர் கடலூர் முதுநகரில் தங்கி டிராவல்ஸ் ஒன்றில் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.சம்பவத்தன்று சித்திக் தனது நண்பர் ஷாகுல் ஹமீது என்பவருடன் கடலூர் சொத்திக்குப்பம் பரவனாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சாகுல் ஹமீது மற்றும் சித்திக் ஆகியோர் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக படகில் வந்த மீனவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாகுல் ஹமீதை மீட்க முயற்சித்தனர். ஆனால் சித்திக் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உயிரிழந்த சித்திக் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கவின் பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு வீட்டிலிருந்து விவசாயம் செய்து வருகிறார்.
    • நிலத்துக்கு சென்ற கவின் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வயலுக்கு சென்று பார்த்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் காணை அடுத்துள்ள காங்கேயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கவின் (வயது 24). பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு வீட்டிலிருந்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கவின் தினமும் காலையில் தனது சொந்த நிலத்திற்கு சென்று நீர் பாய்ச்சுவது வழக்கம். அதேபோல் நேற்று கவின் தனது சொந்த நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கவின் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நிலத்துக்கு சென்ற கவின் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வயலுக்கு சென்று பார்த்தனர். அப்போது கவின் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×