என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிய போது பரிதாபம்: மின்சாரம் தாக்கி பட்டதாரி வாலிபர் பலி
- கவின் பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு வீட்டிலிருந்து விவசாயம் செய்து வருகிறார்.
- நிலத்துக்கு சென்ற கவின் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வயலுக்கு சென்று பார்த்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் காணை அடுத்துள்ள காங்கேயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கவின் (வயது 24). பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு வீட்டிலிருந்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கவின் தினமும் காலையில் தனது சொந்த நிலத்திற்கு சென்று நீர் பாய்ச்சுவது வழக்கம். அதேபோல் நேற்று கவின் தனது சொந்த நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கவின் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நிலத்துக்கு சென்ற கவின் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வயலுக்கு சென்று பார்த்தனர். அப்போது கவின் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






