கடலூர் அருகே நண்பர்களுடன் பரவனாற்றில் குளித்த வாலிபர் பலி

சித்திக் கடலூர் முதுநகரில் தங்கி டிராவல்ஸ் ஒன்றில் அலுவலராக பணிபுரிந்து வந்தார். சித்திக் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் அருகே  நண்பர்களுடன் பரவனாற்றில் குளித்த வாலிபர் பலி
Published on

கடலூர்:

திருச்சி லால்குடியை சேர்ந்தவர் சித்திக் (வயது 28). இவர் கடலூர் முதுநகரில் தங்கி டிராவல்ஸ் ஒன்றில் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.சம்பவத்தன்று சித்திக் தனது நண்பர் ஷாகுல் ஹமீது என்பவருடன் கடலூர் சொத்திக்குப்பம் பரவனாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சாகுல் ஹமீது மற்றும் சித்திக் ஆகியோர் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக படகில் வந்த மீனவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாகுல் ஹமீதை மீட்க முயற்சித்தனர். ஆனால் சித்திக் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உயிரிழந்த சித்திக் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com