என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மாற்றுத் திறனாளி சிறுமிக்கு சக்கர நாற்காலி வழங்கிய காட்சி.
மனு அளித்த உடனே மாற்றுத்திறனாளி சிறுமிக்கு சிறப்புசக்கர நாற்காலி: கலெக்டர் ஷ்வரன் குமார் வழங்கினார்
- மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .
- இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலை அடுத்துள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் விக்னேஷ்வரி (வயது 6) இவர் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .
இவருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என இவரது தாய் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தார். மனுவை பெற்று மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலமாக ரூ.11 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியினை மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.