மனு கொடுக்க ஆம்புலன்சில் வந்த மாற்றுதிறனாளி

கோவை அரசு ஆஸ்பத்திரி மீது குற்றச்சாட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
மனு கொடுக்க ஆம்புலன்சில் வந்த மாற்றுதிறனாளி
Published on

கோவை, 

கோவை அடுத்த கணபதியை சேர்ந்தவர் பாபு (வயது 45). மாற்றுத்திறனாளி. இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்.

இதனையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டார். அவர்கள் ஸ்கேன் செய்ய முன்பதிவு செய்த பின் சில நாட்கள் ஆகும் என கூறியதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த பாபு இன்று காலை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விவரத்தை கேட்டு அறிந்தனர். பின்னர் போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டார். 

X

Maalai Malar
www.maalaimalar.com