நாகை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதியது.விபத்தில் ராஜவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நாகை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேலு (வயது 30).

இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஒரத்தூர் மெடிக்கல் காலேஜ் ரோடு அருகே செட்டிச்சேரி என்ற இடத்தில் வந்த போது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதியது.

இந்த விபத்தில் ராஜவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜவேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com