search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager death"

    • காலையில் சாப்பிடாமல் சென்றதால் பரிதாம்
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள நவக்கரையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28).

    இவர் வாரந்ேதாறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அதன்படி நேற்று விடுமுறை நாள் என்பதால் தினேஷ்குமார் நண்பர்க ளுடன் கிரிக்கெட் விளை யாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் சாப்பிடாமல் பந்து வீசினார். திடீரென வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தினேஷ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள தால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

    இதனையடுத்து தினேஷ்குமாரை அவரது நண்பர்கள் மதுக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தினே ஷ்குமார் இறந்து விட்டதாக கூறினார். இதனை கேட்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இதுகுறித்து கே.ஜி. சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇட த்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    சந்துரு (வயது 20). மோட்டார் சைக்கிளில்திருநாவலூர் சென்று கொண்டிருந்த போது,பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்துரு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சங்கர் மகன் சந்துரு (வயது 20). இவர் கடந்த 22.10.2019 அன்று மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக திருநாவலூர் சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்துரு, சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த சந்துருவின் தந்தை மற்றும் சகோதரர் நஷ்டஈடு கேட்டு, கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடுத்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சந்துரு குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சத்து 15 ஆயிரத்து 680 வழங்க வேண்டும் என கடந்த 24.2.2021 அன்று உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு தொகை வழங்காததால், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 20.12.2022 அன்று விசாரித்த கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி சுபா அன்புமணி, சந்துரு குடும்பத்திற்கு வட்டியுடன் ரூ.11 லட்சத்து 77 ஆயிரத்து 740 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்காததால், நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    • தனசேகரன் திருச்செங்கோட்டில் உள்ள தம்பியை பார்த்துவிட்டு மீண்டும் நெய்வேலிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார்.
    • கொங்கு திருமண மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் கட்டையில் மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள செங்கோட்டை பாளையம் பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் நித்திஷ் (வயது 19). இவர் டிப்ளமோ படித்துவிட்டு நெய்வேலியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள தம்பியை பார்த்துவிட்டு மீண்டும் நெய்வேலிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார். அப்போது அமையாபுரம் தாண்டி வந்து கொண்டிருந்த பொழுது சின்னசேலம் கொங்கு திருமண மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் கட்டையில் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நித்திஷ் சின்னசேலம் அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவப்பூர் ரெயில்வே கேட்டை ஒட்டிய தண்டவாள பகுதியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் எக்பிரஸ் ரெயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட்டை ஒட்டிய தண்டவாள பகுதியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இன்று காலை காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் எக்பிரஸ் ரெயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டதா அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்தோடு ரெயில் முன்பு பாய்ந்தாரா? என்று புதுக்கோட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெரம்பலூர் தோமினிக் ஒட்டத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் ( வயது 26).
    • நேற்று இரவு நீலகண்டன் மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் தோமினிக் ஒட்டத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் ( வயது 26). இவரது சகோதரருக்கு பெரம்பலூர் அம்மாபாளையம் பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தினை நீலகண்டன் பராமரித்து வந்தார். மேலும் இரவு நேரங்களில் தோட்டத்தின் பாதுகாப்புக்காக செல்வார்.

    வழக்கம்போல் நேற்று இரவு நீலகண்டன் மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு சென்றார். பெரம்பலூர் குரும்பலூர் கலை அறிவியல் கல்லூரி அருகாமையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நீலகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லிக்குப்பம் அருகே இளம்பெண் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில் போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது.
    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கதை சேர்ந்தவர் முத்து. லாரி டிரைவர். இவருடைய மகள் ஹேமலதா (வயது 18). கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    கடந்த 22-ந் தேதி மதியம் இறந்த நிலையில் ஹேமலதாவின் உடலை ஒரு வாலிபர் மேல்பட்டாம் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஹேமலதா தந்தை முத்துவிடம் ஹேமலதா எப்படி இறந்தார், உடலை வைத்து விட்டு தப்பி ஓடிய வாலிபர் யார் என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்தனர்.

    அதில் பல புதிய தகவல்கள் கிடைத்தது.

    ஹேமலதா பகண்டை பகுதியை சேர்ந்த காத்தவராயன் என்பவரை நடுவீரப்பட்டு கோவிலில் கல்யாணம் செய்துகொண்டார். பின்னர் காத்தவராயனுடன் ஹேமலதா கொடைக்கானல் மற்றும் பழனிக்கு சுற்றுலா சென்றார்.

    அங்கு தனியார் விடுதியில் ஹேமலதா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு ஹேமலதா உடலை மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள அவரது தந்தை முத்து வீட்டில் வைத்து விட்டு காத்தவராயன் சென்று விட்டார் என்று தெரிந்தது.

    ஹேமலதா வரதட்சணை கொடுமையால் இறந்திருக்கலாம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காத்தவராயனை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    ×