சாலை விபத்தில் வாலிபர் பலி

பெரம்பலூர் தோமினிக் ஒட்டத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் ( வயது 26). நேற்று இரவு நீலகண்டன் மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாலை விபத்தில் வாலிபர் பலி
Published on

பெரம்பலூர் :

பெரம்பலூர் தோமினிக் ஒட்டத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் ( வயது 26). இவரது சகோதரருக்கு பெரம்பலூர் அம்மாபாளையம் பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தினை நீலகண்டன் பராமரித்து வந்தார். மேலும் இரவு நேரங்களில் தோட்டத்தின் பாதுகாப்புக்காக செல்வார்.

வழக்கம்போல் நேற்று இரவு நீலகண்டன் மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு சென்றார். பெரம்பலூர் குரும்பலூர் கலை அறிவியல் கல்லூரி அருகாமையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நீலகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com