எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் பலி

திருவப்பூர் ரெயில்வே கேட்டை ஒட்டிய தண்டவாள பகுதியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார். காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் எக்பிரஸ் ரெயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் பலி
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட்டை ஒட்டிய தண்டவாள பகுதியில் இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் பாகங்கள் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.

அவர் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. இன்று காலை காரைக்குடியில் இருந்து சென்னை வரை செல்லும் பல்லவன் எக்பிரஸ் ரெயில் மோதி அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டதா அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்தோடு ரெயில் முன்பு பாய்ந்தாரா? என்று புதுக்கோட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com