search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus confiscation"

    • தனலட்சுமி (வயது 16). நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் அரசு பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்தார். இவர் , பஸ்சில் நின்றபடி பயணம் செய்த மாணவி தனலட்சுமி படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார்‌.
    • இதில் பஸ்சில் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே மாணவி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த இடையார் குப்பம் சிறுநங்கைவாடி பலாப்பட்டு வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அல்லி முத்து. இவரது மகள் தனலட்சுமி (வயது 16). நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் அரசு பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 22.6.2018 அன்று சாத்திப்பட்டு - கடலூர் செல்லும் அரசு பஸ்ஸில் ஏறி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பஸ் கொஞ்சிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவர் திடீரென்று பிரேக் போட்டதால், பஸ்சில் நின்றபடி பயணம் செய்த மாணவி தனலட்சுமி படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் பஸ்சில் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலே மாணவி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக அவரது பெற்றோர் நஷ்ட ஈடு கேட்டு கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முக்குந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உயிரிழந்த தனலட்சுமி குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக 9 லட்சம் மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இதுவரை நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதனை தொடர்ந்து நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டதில், அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்த விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    • விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23).கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார்.
    • கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார்

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23). இவர் கடந்த 16 .10. 2014 அன்று கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார்  அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்சில் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார்    இதனையடுத்து அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மகனை இழந்த ராஜேந்திரனின் தந்தை சேகர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திடம் நஷ்டஈடு கேட்டு விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

      வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 26 .4 .2018 அன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூபாய் 12 லட்சத்து 24ஆயிரம் தொகை மற்றும் வழக்கு செலவுகளுக்கான தொகை ஆகியவற்றை நஷ்ட ஈடாக ராஜேந்திரன் தந்தை சேகரிடம், செலுத்துமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.நஷ்ட ஈடு தொகையை மூன்று தவணைகளாக செலுத்திய நிலையில், பாக்கித் தொகையை அளிக்காமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இருந்து வந்துள்ளது.  இந்நிலையில் நஷ்ட ஈடு தொகை அளிக்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து கோர்ட்டு அமீனா காசிநாதன் தலைமையிலான கோர்ட்டு ஊழியர்கள் வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தின் முன் நிறுத்தினர்.மனுதாரர் தரப்பில்ள் வக்கீல்கள் ஜெயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் வாதாடினர்.

    சந்துரு (வயது 20). மோட்டார் சைக்கிளில்திருநாவலூர் சென்று கொண்டிருந்த போது,பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்துரு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சங்கர் மகன் சந்துரு (வயது 20). இவர் கடந்த 22.10.2019 அன்று மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக திருநாவலூர் சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சந்துரு, சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த சந்துருவின் தந்தை மற்றும் சகோதரர் நஷ்டஈடு கேட்டு, கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடுத்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, விழுப்புரம் போக்குவரத்து கழகம் சந்துரு குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சத்து 15 ஆயிரத்து 680 வழங்க வேண்டும் என கடந்த 24.2.2021 அன்று உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு தொகை வழங்காததால், நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 20.12.2022 அன்று விசாரித்த கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி சுபா அன்புமணி, சந்துரு குடும்பத்திற்கு வட்டியுடன் ரூ.11 லட்சத்து 77 ஆயிரத்து 740 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்காததால், நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    ×