search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலத்தில்  நஷ்ட ஈடு தொகை செலுத்தாததால் அரசு பஸ் ஜப்தி
    X

    ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்.

    விருத்தாசலத்தில் நஷ்ட ஈடு தொகை செலுத்தாததால் அரசு பஸ் ஜப்தி

    • விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23).கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார்.
    • கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார்

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (23). இவர் கடந்த 16 .10. 2014 அன்று கோ.பூவனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பஸ்மோதி படுகாயம் அடைந்தார் அருகில் இருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்சில் விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கடலூர் செல்லும் வழியிலேயே ஆம்புலன்சிலே ராஜேந்திரன் உயிரிழந்தார் இதனையடுத்து அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மகனை இழந்த ராஜேந்திரனின் தந்தை சேகர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திடம் நஷ்டஈடு கேட்டு விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 26 .4 .2018 அன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ரூபாய் 12 லட்சத்து 24ஆயிரம் தொகை மற்றும் வழக்கு செலவுகளுக்கான தொகை ஆகியவற்றை நஷ்ட ஈடாக ராஜேந்திரன் தந்தை சேகரிடம், செலுத்துமாறு கோர்ட்டு உத்தரவிட்டது.நஷ்ட ஈடு தொகையை மூன்று தவணைகளாக செலுத்திய நிலையில், பாக்கித் தொகையை அளிக்காமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நஷ்ட ஈடு தொகை அளிக்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து கோர்ட்டு அமீனா காசிநாதன் தலைமையிலான கோர்ட்டு ஊழியர்கள் வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பஸ்சை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தின் முன் நிறுத்தினர்.மனுதாரர் தரப்பில்ள் வக்கீல்கள் ஜெயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் வாதாடினர்.

    Next Story
    ×