search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானிலை ஆய்வு மையம்"

    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ந்தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * நாளை தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வரும் 15-ந்தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வரும் 16-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வரும் 17, 18-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது.
    • வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. 110 டிகிரி வரை தற்போது வெயில் தாக்கி வருகிறது.

    இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது.

    இதை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 11 மாவட்டங்களில் மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இது இருக்கும்.
    • பொதுமக்கள் நீர் நிலைகள் பகுதிக்கு செல்ல வேண்டாம். வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமானதால் மின் நுகர்வும் அதிகரித்தது. இதனால் மின் நுகர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வருகிற 13-ந்தேதி வரை கேரளாவில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய 11 மாவட்டங்களில் மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இது இருக்கும்.

    எனவே பொதுமக்கள் நீர் நிலைகள் பகுதிக்கு செல்ல வேண்டாம். வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.
    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    தமிழகம் முழுவதும் இன்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

    ஈரோடு 106.52, நாமக்கல் 103.1, மதுரை விமானநிலையம் 102.92, திருச்சிராப்பள்ளி 102.74, சேலம் 101.84, மதுரைநகரம் - 101.48, பாளையங்கோட்டை 101.12, திருப்பத்தூர் 100.76, திருத்தணி 100.04 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

    வால்பாறை 66.2, கொடைக்கானல் 71.06, குன்னூர் 72.5, உதகமண்டலம் 75.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    • பத்து நாட்களில் பருவக்காற்றுக்கு முந்திய மழை பெய்யும்.
    • வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்யக்கூடும்.

    கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அரபிக் கடலில் தென்மேற்கு பருவக்காற்று வீச தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்னும் பத்து நாட்களில் பருவக்காற்றுக்கு முன்னரே மழை பெய்யத்துவங்கும்.

    இதனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்க வாய்ப்புள்ளாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    கடந்த ஆண்டு அரபிக் கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பருவமழை தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட கொளுத்தி வருகிறது.
    • தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலை வீசி வருகிறது. வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட கொளுத்தி வருகிறது.

    வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலை தருகிறது. ஆனால் தொடர்ந்து வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.16 டிகிரி வெளியில் கொளுத்தியது.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

    வேலூரில் இன்று அதிகபட்சமாக 98.4 டிகிரி வெப்பம் பதிவானது. 41 நாட்களுக்குப் பிறகு 100 டிகிரி ஃபாரன்ஹீட்-க்கு கீழ் வெப்பம் பதிவாகியுள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    தமிழ்நாட்டில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

    ஈரோடு 105.8, மதுரை விமான நிலையம் - 105.26, மதுரை நகரம் - 103.28, திருச்சியில் 103.1, நாமக்கல்- 102.2, பாளையங்கோட்டை - 102.2, கோயம்பத்தூர் 101.12, திருப்பத்தூர் 100.76, சேலம் - 100.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    • அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
    • இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    10-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    11-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    13 மற்றும் 14-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று முதல் 12-ந்தேதி வரை: அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

    08.05.2024 முதல் 12.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40°-41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°-39° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

    08.05.2024 முதல் 12.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலையில் / இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் மழை.
    • இடி, மின்னல், காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சதத்தை அடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதற்கு நேர்மாறாக ஒரு சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

    இருப்பினும், சென்னையை பொறுத்தவரையில் கோடை மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. பலத்த காற்றும் வீசியதால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

    இதனால், மக்கள் வெகு நாட்களுக்கு பிறகு குளுமையான வானிலையை உணர்ந்தனர்.

    மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இடி, மின்னல், காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், திருபத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது.
    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    தமிழகம் முழுவதும் இன்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    தமிழ்நாட்டில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

    திருச்சி 107.78, மதுரை விமான நிலையம் 107.06, கரூர் பரமத்தி 106.7, பாளையங்கோட்டை - 106.7 மதுரை நகரம் 106.16, ஈரோடு 105.44, வேலூர் - 104.9, திருத்தணி 104.18, தஞ்சாவூர் - 104, மீனம்பாக்கம் -101.48, சேலம் - 100.94, கோவை - 100.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    • இந்தியாவிலேயே இன்று அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியில் 114.8 டிகிரி வெயில் கொளுத்தியுள்ளது
    • தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும்

    தமிழகம் முழுவதும் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி, ஈரோட்டில் 110 டிகிரி வெயில் கொளுத்தியது.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்தியாவிலேயே இன்று அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியில் 114.8 டிகிரி வெயில் கொளுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

    திருச்சி - 109, வேலூர் - 109, மதுரை விமான நிலையம் - 108, திருத்தணி - 107, திருப்பத்தூர் - 107, பாளையங்கோட்டை - 106, மதுரை நகரம் - 105, சேலம் - 105, தருமபுரி - 104, தஞ்சாவூர் - 104, மீனம்பாக்கம் - 102, கோவை - 102, நாகப்பட்டினம் - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    • வருகிற 9-ந்தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
    • கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும்.

    ராமேசுவரம்:

    தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதற்கிடையே தமிழகத்தின் தென் கடல் பகுதியில் எந்த வித அறிவிப்பும் இன்றி திடீரென்று ஏற்படும் கடல் சீற்றமான கள்ளக்கடல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய வானிலைமையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் நீண்ட இடைவெளி விட்டு பாதுகாப்புடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நேற்று கேரளா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் கள்ளக்கடல் நிகழ்வு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி, திருவனந்தபுரம், பூந்துறை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.

    இந்த நிலையில், தென் கடல் பகுதியான தனுஷ் கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கை யூர் உள்ளிட்ட கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கடல் சீற் றத்துடன் காணப்பட்டது.

    கரையோரம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ×