search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளிமண்டல கீழடுக்கு சுழற்சி"

    • தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
    • மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நெல்லை நாலுமுக்கு பகுதியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×