search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குவாதம்"

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது
    • அனுமதி இல்லை என்ற போலீசார் கூறியதால் வாக்குவாதம்

    கரூர்,

    கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய போது காவல்துறை அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுகரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட பொருளாளர் சதீஷ் என்கிற நிலவன் தலைமையில் நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கரூர் மண்டல துணைச்செயலாளர் வழக்கறிஞர் ராஜா என்கிற மன்னன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டத்தில் விசிக மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பொறியாளர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் சுரேந்தர், கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் ரவிநாத், வடக்கு நகர செயலாளர் அடங்காத்தமிழன் அருள், கரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வப்பெருந்தகை, கண்மணி ராமச்சந்திரன், மாவட்ட ஊடக அணி அமைப்பாளர் புலி ஈழம் உதயா, பசுவை மணிமாறன் தரைக்கடை சங்க செயலாளர் சுப்பிரமணி, தமிழ்ச்செல்வன், ஆகாஷ், உப்பிடமங்கலம் மணிமாறன், அரவக்குறிச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அரசியல் கட்சிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் கூறியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசு ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் பொழுது மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , துணை மேயர் பாலசுப்ரமணியம் , மண்டல தலைவர்கள் , மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாநகராட்சி கவுன்சிலர்கள் பயிற்சி முகாமிற்கு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மாநகராட்சி சார்பில் மேயர், துணை மேயர் , மண்டல தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வந்திருக்கக் கூடிய நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் உயர் அதிகாரிகள் யாரும் ஏன் வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிகழ்ச்சி ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திட்டமிட்ட நிலையில் திடீரென முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் ஆய்வு கூட்டம் தேதி குறிக்கப்பட்டதால் அங்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்து மாமன்ற உறுப்பினர்களை சமரசம் செய்தனர்.

    இதன் பின்னர் பள்ளி மேலாண்மை குழுவின் உரிமைகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

    • கோவிலுக்கு அருகில் சிகரெட் பிடிக்க கூடாதென சற்குணராஜ் குடும்பத்தார் ஈஸ்வரனிடம் கூறியுள்ளனர்.
    • ஈஸ்வரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சற்குணராஜை வழிமறித்து கத்தியால் வெட்டினர்.

    கள்ளக்குறிச்சி:

    தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது. இந்த மினி லாரியை நாகை மாவட்டத்தை சேர்ந்த அசாருதீன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது சாலையோரம் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ரோந்து வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரோந்து வாகனத்தில் வந்த அதிகாரிகள் எதிர்புறத்தில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    இறால் மீன் மீன் ஏற்றிவந்த மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது. இதில் மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியே சென்றவர்கள், மினி லாரியில் இருந்த டிரைவர் அசாருதீனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூ ர்பேட்டை தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மினி லாரி மற்றும் அதிலிருந்த இறால் மீன்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பிய படி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.
    • கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் அதை தடுக்க தவறிய மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கடலூர் அண்ணா மேம்பாலம் அருகில் மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமையிலும் நகர செயலாளர் நாகராஜ், நகர துணை செயலாளர் பாக்கியம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பிய படி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் குவிந்திருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என கூறினர்.


    இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

    • கோவிலில் இருந்த ஒரு சிலர் பெண் வேடமிட்டவரை கேலி செய்தனர்.
    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு இக்கோவிலில் நேற்று சாகை வார்த்தல் (கூழ் ஊற்றுதல்) நடைபெற்றது. அப்போது ஐதீகப்படி ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு கோவிலுக்கு வந்தார். கோவிலில் இருந்த ஒரு சிலர் பெண் வேடமிட்டவரை கேலி செய்தனர். இதனை அங்கிருந்தவர்கள் தட்டி கேட்டனர். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன், கோவில் அருகில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 பிரிவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் கோவில் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
    • சாலை மற்றும் தெருக்களில் குப்பைகள் அல்லப்படாமல் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இதனால் தினமும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதேபோல், நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் அன்றாடம் நடைபெறும் தூய்மை பணி, தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்ப ட்டுள்ளது.

    இதனால் கவுன்சி லர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் அன்றாட பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பேரூராட்சியில் நேற்று மின்சார பொருட்கள், பிளம்பிங் பொருட்கள் டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.

    இதனால் விரக்தி அடைந்த கவுன்சிலர்கள் சிலர் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கோபமடைந்த பணியாளர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மேலும், இதனை கண்டித்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி, காலை 6 மணிக்கு வரவேண்டிய 61 துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வரவில்லை.

    இதனால் அதிகாலை திறக்க வேண்டிய பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டிருந்தது. மேலும், குப்பைகள் சேகரிக்க பயன்படுத்தும் வாகனங்களும், அங்கேயே நிறுத்தப்பட்டி ருந்தது.

    சாலை மற்றும் தெருக்களில் குப்பைகள் அல்லப்படாமல் ஆங்காங்கே சிதறி கிடந்தது.

    இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • பார் உரிமையாளர் வாங்கும் மது பாட்டில்களுக்கும் குவாட்டருக்கு 5 ரூபாயும் பீர் பாட்டில் ஒன்றிற்கு பத்து ரூபாயும் கட்டாய வசூல் செய்வதாக புகார் தெரிவித்தார்.
    • இது சம்பந்தமாக தருமபுரி டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார்.

    தருமபுரி,

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதற்குரிய அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் கடைகளில் மது பாட்டில்களின் விலைப்பட்டியலை பட்டியலிடுவதற்கு முன் பகுதியில் கட்டாயம் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த நிலையில் அமைச்சரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவாட்டருக்கு 5 ரூபாய் பீர்பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் மதுபாட்டில்களை வாங்கும் போது பாட்டிலின் விலையை விட கூடுதலாக பணம் வாங்குவதால் மது பிரியர்கள் பணத்தை கொடுத்து விட்டு மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

    தருமபுரி அடுத்த பாலக்கோடு சாலை சோகத்தூர் பகுதியில் இரண்டு அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்த கடையை ஒட்டி இடத்தின் உரிமையாளர் பார் நடத்தி வருகிறார்.

    பார் உரிமையாளர் வாங்கும் மது பாட்டில்களுக்கும் குவாட்டருக்கு 5 ரூபாயும் பீர் ஒன்றிற்கு பத்து ரூபாயும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சியில் அ.தி.மு.க. கொடி ஊன்றுவதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போலீசாருடன், அதிமுகவினர் கடும் வாக்குவாதம்

    திருச்சி, 

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலநது கொள்ளும், எம்ஜிஆரின் வெண்கல சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார் செய்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் கொடி கட்டும் பணியில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது விமான நிலைய காவல் நிலைய போலீசார் கட்சி கொடியினை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

    • இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சாவில் மர்மம் இருப்பதாக சுவிதாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச் சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் மண்ணாங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுவிதா இருவருக்கும் கடந்த மாதம் 28ஆம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சுவிதாவும் சதீஷும் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சுவிதா தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சதீஷிடம் கூறிவிட்டு வாட்ஸ் அப்பை ஆன் பண்ணி அப்படியே தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் உடனடியாக தனது வீட்டுக்கு சென்று பார்த்தபோது சுவிதா தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனடியாக சுவிதாவை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து ள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் விஷம் அருந்திய நிலையில் அவரது நண்பர்கள் அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனையை விட்டு வெளியேறி சென்ற சதீஷ் மதியத்திற்கு மேல் தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

    புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சுவிதா மற்றும் சதீஷ் ஆகியோரின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். மேலும் திருமணம் ஆகி இருபதே நாட்கள் ஆன நிலையில் பட்டுக்கோட்டை ஆர்டிஓ (பொறுப்பு) இலக்கியா நேரடியாக சென்று பார்வையிட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக சுவிதாவின் பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். திருமணம் ஆகி இருபதே நாட்களான புது தம்பதி இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Investigation, விசாரணைInvestigation, விசாரணை

    • அதிகாரிகள் விசாரணை
    • கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அருகே உள்ள பிஎம்வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமுத்தன் ( வயது 60). பீடி சுற்றும் தொழிலாளி.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அனுமுத்தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று திடீரென உயிரிழந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை புதைப்பதற்காக, உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு குழி தோண்ட சென்றனர்.

    அப்போது சுடுகாடு அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர்கள், உடலை புதைக்க குழி தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அனுமுத்தன் உறவினர்களுக்கும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, கிராம நிர்வாக அலுவலர் மத்தான் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சுடுகாட்டில் உடலை புதைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதனை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • குடிநீர் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில், மேலத் தெரு மற்றும் கிழக்குத்தெரு பகுதி மக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யப் படவில்லை. இதனால் ஒரு வாரமாக அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிதண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

    குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தி மேற்கண்ட பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ய தயாராகினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணி மேகலை மற்றும் மண்டல அதிகாரி மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் ராமு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட போவதாக கூறி அதிகாரி களுடன் வாக்குவாத்தில் னஈடுபட்டனர்.

    ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டும், அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • ஆவேசமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் இன்று திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வாக்குவாதத்தில் மீனவர் ஒருவர் திடீரென டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூரில் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இன்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய மேலபட்டினச்சேரி மீனவர்கள் பிடித்து வந்த மத்தி மீன்களை நாகூர் துறைமுகத்தில் விற்பனை செய்யக்கூடாது என மற்றொரு தரப்பு மீனவர்கள் தடுத்துள்ளனர்

    மேலும் அந்த மீன்களை வியாபாரிகள் ஏலம் எடுக்க கூடாது எனவும் கூறியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த மேலபட்டினச்சேரி மீனவர்கள் இன்று திடீரென நாகூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் விற்பனை செய்ய முடியாததால் ஆத்திரமடைந்து அவர்கள் பிடித்து வந்த அந்த மீன்களை சாலையில் கொட்டி துறைமுகத்தில் மீன் விற்க தங்களுக்கு உரிமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

    மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் நாகூர் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது இதையடுத்து அங்கு வந்த டிஎஸ்பி சரவணன் நாகூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம்ஆகியோர் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவா ர்த்தையில் ஈடுபட்டனர்அப்போது போலீசா ருக்கும் மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் திடீரென டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார் இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.அதனைத் தொடர்ந்து நாகூர் மீன்பிடி துறைமுக த்தில் மீன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை இணை இயக்குனர் ஜெயராஜ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

    அரசால் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கு சம உரிமை வழங்கி மீன்களை எந்த ஒரு பிரச்சனையுமின்றி விற்பனை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகூர் மேலப்பட்டினச்சேரி மீனவர்கள் வலியுறு த்தியுள்ளனர்.அதனை தொடர்ந்து மேல பட்டினச்சேரி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலை யில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் ஏலத்தை தொடங்கினார்கள். தொடர்ந்து நாகூர் துறைமு கத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×