search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rail strike"

    • ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
    • தமிழகத்திற்கான காவிரி பங்கீட்டு நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

    நாமக்கல்:

    கர்நாடக அரசை கண்டித்து வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) சேலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது குறித்து நாமக்கல்லில் அதன் மாநில தலைவர் வேலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்திற்கான காவிரி பங்கீட்டு நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் டெல்டா பகுதிகள் நீரின்றி பாலைவனமாகும் சூழல் உருவாகியுள்ளது. உரிய நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் ஜங்ஷன் வழியாக கர்நாடகத்திற்கு செல்லும் ரெயில்களை மறித்து வருகிற சனிக்கிழமை காலை 11 மணியளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

    இதில் உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திரளாக பங்கேற்க உள்ளனர். டெல்டா பாசன விவசாயிகளும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தஞ்சையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    தஞ்சாவூர்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கத் தவறியது , தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாநகர செயலாளர் வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டு ரெயிலை மறிப்பதற்காக மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    ஆனால் அவர்களை ரயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் போலீசார் பேரிகார்டுகள் கொண்டு தடுப்புகள் அமைத்தனர் .

    அப்போது கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாற்று வழியாக ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர்.

    பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டா யமாக அப்புறப்படுத்தினர்.

    சிலர் பேரிக்கார்டை தகர்த்து ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களையும் போலீசார் அப்புறப்ப டுத்தினர்.

    ரயில் மறியல் போராட்ட த்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கும்பகோணத்தில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டக்காரர்களுக்கும் காவல்துறை இருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சுவாமிமலை:

    விலைவாசி கட்டுப்படுத்திடவும் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை கொடுக்கவும், 100 நாள் வேலையை முழுமையாக வழங்கிட வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ரெயில் மறியல் போராட்டத்திற்கு சி.பி.எம் மாவட்ட செயலாளர் சின்னை, பாண்டியன் தலைமை வகித்தார்.

    மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜன் மாநகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான சிபிஎம் கட்சியின கலந்து கொண்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காவல்துறையினர் முன்னதாகவே ரயில் நிலையம் வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பலரை கைது செய்தனர்.

    இருப்பினும் வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ராமர் உள்ளிட்ட வாலிபர் சங்கத்தினர் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் காலை 8.40க்கு வந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மறிலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கும் காவல்துறை இருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன முழக்கமிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.

    • நிர்வாகிகள் பேரணியாக புறப்பட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்று கொண்டிருந்தனர்.
    • சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் , காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் , என்.எல்.சி. யில் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்து நிரந்தர வேலை வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளுர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை கடலூர் ஜவான் பவன் சாலை அருகில் இருந்து மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம் முன்னிலையில் மாவட்ட செயற்குழு சுப்பராயன், ராஜேஷ், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பேரணியாக புறப்பட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்று கொண்டிருந்தனர். பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி கொண்டிருந்தபோது, போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 200 பேரை கைது செய்தனர்.  

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல்லில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர்.
    • தண்டவாளத்தில் படுத்தும் போராட்டம் நடத்தியவர்களை குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    திண்டுக்கல்:

    மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர் விரோத கொள்கைகள், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல்லில் ரெயில் மறியல் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்றுகாலை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்ராமலிங்கம் தலைமையில் நகரச்செயலாளர் அரபுமுகமது, ஒன்றிய செயலாளர் சரத்குமார், நிர்வாகிகள் ஜோதிபாசு, கணேசன், மாரியம்மாள், தவக்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியவாறு ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இருந்தபோதும் அவர்கள் தடுப்புகளை தாண்டி உள்ளே நுழைந்து ரெயிலை மறித்தும், தண்டவாளத்தில் படுத்தும் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ைகது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பிய படி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.
    • கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் அதை தடுக்க தவறிய மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கடலூர் அண்ணா மேம்பாலம் அருகில் மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமையிலும் நகர செயலாளர் நாகராஜ், நகர துணை செயலாளர் பாக்கியம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பிய படி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் குவிந்திருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என கூறினர்.


    இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

    • 100-க்கும் மேற்பட்டோர் கைது
    • மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்

    போளூர்:

    போளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம். கே.விஷ்ணு பிரசாத் தலைமை தாங்கினார்.

    இந்தப் போராட்டத்தில் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், கொம்மனந்தல் சுரேஷ் சேத்துப்பட்டு முனிரத்தினம், சத்யன், ஆரணி ராமலிங்கம், தெள்ளார் தனஞ்செழியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசாரை கைது செய்தனர்.
    • சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன் தலைமை தாங்கினார்.

    மானாமதுரை

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டனர். ெரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற கட்சியினரை டி.எஸ்.பி.கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்த போராட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய், கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி பகுதியில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 80 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

    • காங்கிரஸ் கட்சியினர் ெரயில் நிலைய முகப்பில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தால் ெரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினர்கள் மீது பொய் வழக்கு தொடுத்து வரும் மத்திய பாஜக., அரசை கண்டித்தும் மக்களுக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தியின் செயல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் ரெயில் நிலைய நுழைவாயிலின் முன்பு தடுத்து நிறுத்தினர்.தொடர்ந்து போலீசாரின் தடுப்பையும் மீறி ஊர்வலமாக ெரயில் நிலையத்திற்குள் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் ெரயில் நிலைய முகப்பில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தால் ெரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    • 100 பேர் கைது
    • ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நடந்தது

    ஆரணி:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஆரணி அருகே களம்பூர் ரெயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதியிலிருந்து விழுப்புரம், ஆரணி மார்கமாக சென்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ெரயிலை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் காங்கிரஸ் கட்சியினரை அப்புறபடுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    போராட்டத்தில் நகர தலைவர் பொன்னையன் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் செல்வம் நகர பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார் நகர இளைஞரணி தலைவர் பிரபு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சாந்தகுமார் நகர பொருளாளர் பிள்ளையார் நகர செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • காங்கிரஸ் கட்சியினர் 80-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    கோவை:

    கோவையில் ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 80-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கோஷமிட்டபடி கோவை ரெயில் நிலையத்தை நோக்கி வந்தனர். பின்னர் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர்.

    அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர்.

    • தென்மாவட்டங்களுக்கு ெரயில் இயக்க வலியுறுத்தி நடக்கிறது.
    • தொழில் நகரமான கோவையில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் வசித்து வருகின்றனா். குறிப்பாக தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனா்.

    கோவை

    கோவை ெரயில் நிலையம் முன் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ. திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு வணிகர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மே 17 இயக்கம் உள்பட 33 அமைப்புகள் ஒன்று சேர்ந்து நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

    இதற்கு த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். இதில், திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதுகுறித்து த.பெ.தி.க பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    காசில்லாமல் பயணிக்க, காசிக்கு மத்திய அரசு ெரயில் விடுகிறது. ஆனால், காசு கொடுத்து பயணிக்க ராமேஸ்வரம், திருச்செந்தூர், தென்காசி, மதுரை, பழனி உள்ளிட்ட நகரங்களுக்கு ெரயில் விட மத்திய அரசு மறுக்கிறது.

    தொழில் நகரமான கோவையில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமானோா் வசித்து வருகின்றனா். குறிப்பாக தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனா்.

    இவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல அரசுப் பஸ்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. பொள்ளாச்சி ெரயில் பாதை சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து ெரயில்கள் இயக்கம் தொடங்கியுள்ளது.

    இந்த நிலையிலும், கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ெரயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு ெரயில் விட்டால், பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.

    கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வர்த்தகம் பெருகும். ெரயில்வே துறைக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். இந்த கோரிக்கையை முன்வைத்து, இந்த ெரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இவ்வாறு கு.ராமகிருஷ்ணன் கூறினார்.

    ×