search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில்  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு  கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்:  40 பெண்கள் உட்பட 200 பேர் கைது
    X

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்: 40 பெண்கள் உட்பட 200 பேர் கைது

    • நிர்வாகிகள் பேரணியாக புறப்பட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்று கொண்டிருந்தனர்.
    • சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் , காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் , என்.எல்.சி. யில் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்து நிரந்தர வேலை வாய்ப்பை அதிகப்படுத்தி உள்ளுர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை கடலூர் ஜவான் பவன் சாலை அருகில் இருந்து மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் சிவானந்தம் முன்னிலையில் மாவட்ட செயற்குழு சுப்பராயன், ராஜேஷ், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பேரணியாக புறப்பட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சென்று கொண்டிருந்தனர். பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி கொண்டிருந்தபோது, போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 200 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×