search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி பார் உரிமையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு
    X

    டாஸ்மாக் கடையின் விற்பனையாளர், பார் உரிமையாளர் இடையே வாக்குவாதம் செய்தனர்.

    தருமபுரி பார் உரிமையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு

    • பார் உரிமையாளர் வாங்கும் மது பாட்டில்களுக்கும் குவாட்டருக்கு 5 ரூபாயும் பீர் பாட்டில் ஒன்றிற்கு பத்து ரூபாயும் கட்டாய வசூல் செய்வதாக புகார் தெரிவித்தார்.
    • இது சம்பந்தமாக தருமபுரி டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார்.

    தருமபுரி,

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளை நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அதற்குரிய அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் கடைகளில் மது பாட்டில்களின் விலைப்பட்டியலை பட்டியலிடுவதற்கு முன் பகுதியில் கட்டாயம் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த நிலையில் அமைச்சரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவாட்டருக்கு 5 ரூபாய் பீர்பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் மதுபாட்டில்களை வாங்கும் போது பாட்டிலின் விலையை விட கூடுதலாக பணம் வாங்குவதால் மது பிரியர்கள் பணத்தை கொடுத்து விட்டு மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

    தருமபுரி அடுத்த பாலக்கோடு சாலை சோகத்தூர் பகுதியில் இரண்டு அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்த கடையை ஒட்டி இடத்தின் உரிமையாளர் பார் நடத்தி வருகிறார்.

    பார் உரிமையாளர் வாங்கும் மது பாட்டில்களுக்கும் குவாட்டருக்கு 5 ரூபாயும் பீர் ஒன்றிற்கு பத்து ரூபாயும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×