search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்கு பதிவு"

    • ரேஷ்மா தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி யில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்த வர் முருகன் (வயது 36). கூலித் தொழிலாளி. இவரது மகள் ரேஷ்மா சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி யில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகன் தனது மகளை அழைத்து வர பிரிதிவிமங்கலத்தில் இருந்து மூரார்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தேரிப்பட்டு அரசு பள்ளி அருகே சென்ற போது, எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்தில் இறந்து போனார்.

    தகவல் அறிந்த தியாகதுரு கம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து முருகன் மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் பஸ் டிரை வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விடு முறைக்காக தனது மகளை அழைத்து வர சென்ற தந்தை விபத்தில் இறந்து போன சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 57) விவசாயி, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் வேலு என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சம்பவத்தன்று ராமச்சந்திரன் தனது விவசாய நிலத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது மாரியம்மன் கோவில் தெரு அருகே வந்தபோது வேலு, அவரது மனைவி அய்யம்மாள், மகன் விஜி மற்றும் உறவினர் கேசவேலு ஆகியோர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வளர்மதி (50) ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதில் காயமடைந்த ராமச்சந்திரன் மற்றும் வளர்மதி ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து ராமச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வேலு, அய்யம்மாள், விஜி மற்றும் கேசவேலு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.
    • சிறுமியின் பெரியப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ், இவரது மனைவி அஸ்வினி. தம்பதியின் மகள் நவிஷ்கா (4), ஒரு வயது மகனும் உள்ளார்.

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வேண்டுமென நவீஷ்கா தந்தையிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து ரமேஷ் தனது மகளுடன் கடைக்கு சென்று விதவிதமான பட்டாசுகளை வாங்கி வந்தனர்.

    நேற்று மாலை நவீஷ்கா தனது குடும்பத்தினருடன் இணைந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். தந்தை ரமேஷ் விதவிதமான பட்டாசுகளை வெடித்தார். அதனை பார்த்து சிறுமி மகிழ்ச்சியடைந்தார்.

    அப்போது சிறுமியின் பெரியப்பாவான ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) பெரிய அணுகுண்டு வகை பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி பட்டாசு அருகே சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ஓடிப்போய் சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசு வெடித்து சிதறி விக்னேஷ் மற்றும் சிறுமியின் மீது விழுந்தது.

    இதில் விக்னேசுக்கு வலது கையிலும், சிறுமிக்கு கை மற்றும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நவிஷ்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுமி உயிரிழந்த செய்தியை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் கதறி அழுதனர்.

    போலீசார் விசாரணையின் போது மதுபோதையில் சிறுமியை ஒரு கையில் வைத்து கொண்டு, மற்றொரு கையால் பட்டாசை வெடித்த போது விபத்தில் சிறுமி உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

    அஜாக்கிரதையாக செயல்பட்ட சிறுமியின் பெரியப்பா மீது வாழைப்பந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • காரில் குடும்பத்துடன் அன்னகாரன் குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • எழில் காரின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்து சென்றுவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் சரண்ராஜ், என்ஜீனியர். இவருக்கு சொந்தமான காரில் குடும்பத்துடன் அன்னகாரன் குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேல் காங்கேயன் குப்பம் அங்காளம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் எழில் குடிபோதையில் கார் கார் மீது உரசினார்.

    காரினை சாலையோரம் நிறுத்திய சரண்ராஜ், எழிலை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த எழில் காரின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்து சென்றுவிட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து எழிலை தேடி வருகின்றனர்.

    • காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா.
    • தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி இருந்த விசைப்படையில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா. இவருக்கு சொந்தமான விசைப்படகு, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள்நடைபெற்று வந்தது. அப்போது படத்தின் கீழ் புறத்தில் வெல்டிங்க் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீ மற்ற பகுதி மற்றும் மற்ற படங்களுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் .ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    • பழனிச் சாமி தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு நேரில் சென்றார்.
    • பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப் பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 27). இவருக்கும் பிரியா என்ப வருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. தற்போது பிரியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று பழனிச் சாமி தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு நேரில் சென்றார். பின்னர் தனது மனைவி பிரியாவிடம் தீபாவளி சீட்டு கட்டுவதற்கு பணம் கேட்டதாக கூறப்படு கிறது ஆனால் பிரியா பணம் தராததால் பழனிச் சாமி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் பழனிச்சாமி தூக்கில் தொங்கிய நிலையில் பிண மாக கிடந்தார். இத்தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சிபி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    அருமனை :

    அருமனை அருகே உள்ள செம்மங்காலையை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் சிபி (வயது 18). இவர் மோட்டார் சைக்கிளில் மேல்புறம் அயக்கோட்டு பகுதியில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்ற வசந்தா (63), மனோகரன் (60) ஆகியோர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் சிபி உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சிபி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எனவே அதே பகுதியில் தனது தம்பி சங்கருடன் வசித்து வந்தார்.
    • சைகை மூலம் விஷ பூச்சி கடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே மடம் காட்டுக்கொட்டாய் பகுதி யைச் சேர்ந்தவர் நடேசன்.இவரது மகள் தெய்வானை (வயது 53) மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆக வில்லை. எனவே அதே பகுதியில் தனது தம்பி சங்கருடன் வசித்து வந்தார். இந்நிலை யில் சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக மடம் ஏரிக்கரை பாதையில் சென்றார். அப்போது அவரை விஷ பூச்சி கடித்த தாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டுக்கு வந்த அவர் வீட்டில் இருந்த வர்களிடம் சைகை மூலம் விஷ பூச்சி கடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதனைப் புரிந்து கொண்ட உறவி னர்கள் அவரை கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தெய்வானை நேற்று காலை இறந்து போனார். இது குறித்து அவரது தம்பி சங்கர் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
    • திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பணம் அதிகமாக புரளும் என்பதை கருத்தில் கொண்டு இந்த ரகசிய சோதனை நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கணக்கு பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த அறையில் இருந்த துணை வட்டார வளர்ச்சி அதிகாரி (கணக்கு) லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200 இருந்தது.

    அந்த பணத்துக்கான கணக்கு விவரங்களை லோகநாதனிடம் கேட்டனர். அவரிடம் எந்தவித விவரமும் இல்லை. இதைத்தொடர்ந்து கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா கூறும்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கணக்கு பிரிவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200, துணை வட்டார வளர்ச்சி அதிகாரியான லோகநாதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார். அந்த காசோலையை வழங்குவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லோகநாதன் லஞ்சம் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • திருப்பாதிரிப்புலியூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • கூத்தப்பாக் கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசாருக்கு கூத்தப்பாக் கம் பகுதியில் கஞ்சா விற் பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீ சார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த வாலி பர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் கே.என். பேட்டை யை சேர்ந்த சிவாஜிகணேசன் (வயது 19) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாஜி கணேசனை கைது செய்தனர்.

    • நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல்வலையாமூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி(வயது45), விவசாயி. இவரது மனைவி அம்பிகாபதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள மோட்டாரை இயக்கி உள்ளார். இதில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. அப்போது அருகில் நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
    • 3 பேர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை:

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்.

    இந்த போரை நிறுத்த கோரியும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த 24-ந் தேதி கோவை உக்கடம் பகுதியில் அனைத்து ஜமாத், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பு மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்தில் அனைத்து ஜமாத்தை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

    போராட்டம் நடைபெற்ற இடத்தையொட்டி புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தின் போது சிலர், மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன கொடியை கட்டி இருந்தனர்.

    இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவியது.

    இதையடுத்து உக்கடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாவட்ட செயலாளர் சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாகீர், ரபீக் ஆகிய 3 பேர் பாலஸ்தீன கொடியை மேம்பாலத்தின் மீது கட்டியது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் சபீர் அலி, அபுதாகீர், ரபீக் ஆகியோர் மீது சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    ×