பண்ருட்டி அருகே கார் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி

காரில் குடும்பத்துடன் அன்னகாரன் குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். எழில் காரின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்து சென்றுவிட்டார்.
பண்ருட்டி அருகே கார் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் சரண்ராஜ், என்ஜீனியர். இவருக்கு சொந்தமான காரில் குடும்பத்துடன் அன்னகாரன் குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மேல் காங்கேயன் குப்பம் அங்காளம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் எழில் குடிபோதையில் கார் கார் மீது உரசினார்.

காரினை சாலையோரம் நிறுத்திய சரண்ராஜ், எழிலை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த எழில் காரின் முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்து சென்றுவிட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து எழிலை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com