search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி இருந்த விசைப்படகில் தீ விபத்து: ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
    X

    தீ விபத்தில் சேதமடைந்த படகு.

    மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி இருந்த விசைப்படகில் தீ விபத்து: ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

    • காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா.
    • தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி இருந்த விசைப்படையில், நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வினோபா. இவருக்கு சொந்தமான விசைப்படகு, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள்நடைபெற்று வந்தது. அப்போது படத்தின் கீழ் புறத்தில் வெல்டிங்க் பணி நடைபெற்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக தீ பொறியானது படகின் சுவற்றுப்பகுதியில் உள்ள பஞ்சில் பற்றிக்கொண்டது.

    தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீ மற்ற பகுதி மற்றும் மற்ற படங்களுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் .ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    Next Story
    ×