தியாகதுருகம் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி கூலித் தொழிலாளி சாவு

ரேஷ்மா தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி யில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தியாகதுருகம் அருகே  தனியார் பள்ளி பஸ் மோதி கூலித் தொழிலாளி சாவு
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் காட்டுக் கொட்டாய் பகுதியை சேர்ந்த வர் முருகன் (வயது 36). கூலித் தொழிலாளி. இவரது மகள் ரேஷ்மா சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி யில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகன் தனது மகளை அழைத்து வர பிரிதிவிமங்கலத்தில் இருந்து மூரார்பாளையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தேரிப்பட்டு அரசு பள்ளி அருகே சென்ற போது, எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்தில் இறந்து போனார்.

தகவல் அறிந்த தியாகதுரு கம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இதுகுறித்து முருகன் மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் பஸ் டிரை வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விடு முறைக்காக தனது மகளை அழைத்து வர சென்ற தந்தை விபத்தில் இறந்து போன சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com