search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் அரிசி"

    • நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சோதனை செய்தனர்.
    • 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    கோவை மண்டல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீஸ்சூப்பிரண்டு பாலாஜி உத்தரவுப்படி திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திருப்பூர் நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும்கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

    அந்த வழியாக வந்த மொபட்டை பின் தொடர்ந்து சென்று சோதனை செய்ததில் ரேஷன் அரிசி 450 கிலோ பதுக்கி வைத்துஇருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசி கடத்தி பதுக்கி வைத்திருப்பவர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் திருப்பூர் செல்லம் நகரைசேர்ந்த அன்புமணி (வயது 23) என்பதும் இவர் நொச்சிபாளையம், வீரபாண்டி பகுதிகளில்உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை பதுக்கி வைத்துவட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அன்புமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தனர்.

    • வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
    • இதனையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கூடுதல் இயக்குனர் அருண் உத்தர வின் பேரில், கோவை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் ஈரோடு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமை யில் போலீசார் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்படி பங்களாபுதூர் அருகே கொண்டைய ன்பாளையம் பகுதியில் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 16 மூட்டைகள் கொண்ட 640 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்ப டுவது தெரிய வந்தது.

    இது குறித்து விசாரித்த போது பவானி மண் தொழிலாளர் வீதியை சேர்ந்த முருகன் (25), பவானி கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த பிரபாகரன் (35) ஆகியோர் ரேஷன் அரிசியை கடத்தி குமார பாளையத்தில் உள்ள வடமாநில தொழிலா ளர்க ளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு 640 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படு த்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர். 

    • அந்த வழியாக மூட்டைகளுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா்.
    • அவரிடமிருந்து 470 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான காவல் துறையினா் திருநீலகண்டபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மூட்டைகளுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் அந்த மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இது தொடா்பாக திருநீலகண்டபுரத்தை சோ்ந்த காா்த்திக் (வயது 32) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 470 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். 

    • வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
    • ரேஷன் அரிசி உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைக்கப் பட்டது.

    கன்னியாகுமரி :

    தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் முட்டம் கடற்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தே கத்திற்கிடமாக கேரளா பதிவெண் கொண்ட சொகுசு கார் வேகமாக வந்தது. அதனை வட்ட வழங்கல் அதிகாரி தடுத்து நிறுத்திய போது, வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    இதனை தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்த போது அதில் நூதன முறையில் மறைத்து சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்துவது தெரிய வந்தது.

    அதனை காருடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு குடோனில் ஒப்படைக்கப் பட்டது.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், வட்டவழங்கல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    • சாா்பு ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீசார் ஆத்துப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினா்.
    • 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் ஆத்துப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கிவைத்து கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் சாா்பு ஆய்வாளா் காா்த்தி தலைமையிலான போலீசார் ஆத்துப்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினா். இந்த சோதனையின்போது ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசாா், இது தொடா்பாக திருச்சி மாவட்டம், தாராநல்லூரைச் சோ்ந்த ஏழுமலை (வயது 33) என்பவரை கைது செய்தனா். 

    • காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
    • காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஈரோடு அருகே லக்காபுரம் முத்துகவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பெருந்துறையை சேர்ந்த பெரியசாமி (வயது 40), கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரை சேர்ந்த குலாம் முஸ்தபா மொண்டல் (22) ஆகியோர் என்பதும், அவர்கள் பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவ ர்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 800 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவுப்படி, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவு படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் வழிகாட்டுதலின் படி, திருப்பூர் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளான கரடிவாவி, மடத்துக்குளம், ஏரகாம்பட்டி, ஒன்பதாறு சோதனை சாவடி ஆகிய சோதனை சாவடிகளின் வழியாக, கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணி நடந்தது.

    திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர். மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை–கள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    • அருப்புக்கோட்டை அருகே வேனில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது20), ராஜபாண்டி(28) என்பதும் தெரியவந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையிலான போலீசார் மதுரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வேனை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.

    ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வேனை சோதனை செய்தனர். அதில் ஏராளமான மூட்டைகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அவற்றில் ரேசன் அரிசி இருந்தது.

    வேனில் இருந்த 20 மூட்டைகளில் மொத்தம் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் வேனில் வந்தவர்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது20), ராஜபாண்டி(28) என்பதும், அவர்கள் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேசன் அரிசியை சேகரித்து மதுரையில் உள்ள ஆலையில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அரிசி மூடைகளை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ேரசன் அரிசி மூட்டைகளை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.

    • தமிழகத்தில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி வருகிறார்கள்.
    • விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவிற்கு சென்று வருகிறது.

    ரேஷன் அரிசி கடத்தல்

    அத்தியாவசிய பொருட்களும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையே சட்ட விரோதமாக தமிழகத்தில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி வருகிறார்கள். இதனை தடுக்க போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் இன்று புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் 18 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    கைது

    உடனடியாக லாரியை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கேரள மாநிலம் கொல்லோடு தாலுகா பனையங்கோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 44) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இந்த ரேஷன் அரிசியை கடத்தி செல்ல இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை கைது செய்த போலீசார் 18 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்த னர்.

    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டை களை குடிமைபொருள் வழங்கல் அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீஸாா் தாராபுரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
    • நந்தகோபால் (25) என்பவரை கைது செய்ததுடன் 500 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசாா் பறிமுதல் செய்தனா். 

    தாராபுரம்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தாராபுரம் வழியாக சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக திருப்பூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீஸாா் தாராபுரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சோ்ந்த நந்தகோபால் (25) என்பவரை கைது செய்ததுடன் 500 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசாா் பறிமுதல் செய்தனா். 

    • அருப்புக்கோட்டையில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • மதுரை சந்தப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    அருப்புக்கோட்டை,

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக ரேஷன் அரிசி கடத்துவதாக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கணேஷ் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரேசன் அரிசியை கடத்திய மதுரையை சேர்ந்த ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

    இந்த கடத்தல் ரேசன் அரிசி மூட்டை அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மதுரை சந்தப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்வதாக கொண்டு செல்லப்பட்டது என கைதான ராமமூர்த்தி தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    • கேரளாவுக்கு கடத்தியபோது பிடிபட்டது
    • போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை போலீசாரும், வருவாய்த்துறையினரும் அடிக்கடி சோதனை நடத்தி தடுப்பதோடு, கடத்தல் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    நேற்று இரவு தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமை யிலான பணியாளர்கள், கல்குளம் வட்டம் குளச்சல் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தே கத்திற்கு இடமாக ஒரு கார் வேகமாக வந்தது.

    அந்த காரை நிறுத்தும் படிஅதிகாரிகள் சைகை காட்டினர். இதனை தொடர்ந்து சற்று தூரம் தள்ளி கார் நிறுத்தப்பட்டது. ஆனால் அதில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை சோதனை செய்த னர். அப்போது காருக்குள் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி மூடைகளில் இருப்பது தெரியவந்தது. அதனை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அரிசி மூடைகள் உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படை க்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டது. கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ×