search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people were arrested for"

    • போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த புரன்சிங், தல்பாத்சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • போதை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அந்தியூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்தியூர்- ஈசப்பாரை ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புரன்சிங் (வயது 22), தல்பாத்சிங் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.25 ஆயிரத்து 200 மதிப்புள்ள ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என சிவகிரி, வரப்பாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது கொமரபாளையம் மற்றும் கோவில் காடு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த நம்பியூர் கொமரபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திருநாவுக்கரசு (வயது 31), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் நாகராஜன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
    • இதனையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கூடுதல் இயக்குனர் அருண் உத்தர வின் பேரில், கோவை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் ஈரோடு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமை யில் போலீசார் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்படி பங்களாபுதூர் அருகே கொண்டைய ன்பாளையம் பகுதியில் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 16 மூட்டைகள் கொண்ட 640 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்ப டுவது தெரிய வந்தது.

    இது குறித்து விசாரித்த போது பவானி மண் தொழிலாளர் வீதியை சேர்ந்த முருகன் (25), பவானி கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த பிரபாகரன் (35) ஆகியோர் ரேஷன் அரிசியை கடத்தி குமார பாளையத்தில் உள்ள வடமாநில தொழிலா ளர்க ளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு 640 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படு த்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர். 

    • மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
    • 2 கடைகளில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஈரோடு பூந்துறை ரோடு அருகே உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த மளிகை கடையில் சோதனையில் ஈடுபட்ட போது 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதனைத்தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் ஈரோடு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சசிமலர் (40) என்பவரை கைது செய்தனர்.

    இதேப்போல் 19 ரோடு வெள்ளாளபாளையம் பகுதியில் போலீசார் ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அந்த கடையிலும் 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.

    இதனையடுத்து கடையின் உரிமையாளரான திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த சிலம்பரசன் (30) என்பவரை கைது செய்தனர். 2 கடைகளில் இருந்தும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×