மதுவிற்ற 2 பேர் கைது

18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவிற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என சிவகிரி, வரப்பாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது கொமரபாளையம் மற்றும் கோவில் காடு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த நம்பியூர் கொமரபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் திருநாவுக்கரசு (வயது 31), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் நாகராஜன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com