மளிகை கடைகளில் புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது

மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.2 கடைகளில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மளிகை கடைகளில் புகையிலை பொருட்களை விற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஈரோடு பூந்துறை ரோடு அருகே உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அந்த மளிகை கடையில் சோதனையில் ஈடுபட்ட போது 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் ஈரோடு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சசிமலர் (40) என்பவரை கைது செய்தனர்.

இதேப்போல் 19 ரோடு வெள்ளாளபாளையம் பகுதியில் போலீசார் ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அந்த கடையிலும் 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.

இதனையடுத்து கடையின் உரிமையாளரான திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த சிலம்பரசன் (30) என்பவரை கைது செய்தனர். 2 கடைகளில் இருந்தும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com