ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 பேர் கைது

வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.இதனையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கூடுதல் இயக்குனர் அருண் உத்தர வின் பேரில், கோவை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் ஈரோடு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமை யில் போலீசார் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி பங்களாபுதூர் அருகே கொண்டைய ன்பாளையம் பகுதியில் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 16 மூட்டைகள் கொண்ட 640 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்ப டுவது தெரிய வந்தது.

இது குறித்து விசாரித்த போது பவானி மண் தொழிலாளர் வீதியை சேர்ந்த முருகன் (25), பவானி கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த பிரபாகரன் (35) ஆகியோர் ரேஷன் அரிசியை கடத்தி குமார பாளையத்தில் உள்ள வடமாநில தொழிலா ளர்க ளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு 640 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படு த்தப்பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்க ப்பட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com