என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
தாராபுரம் அருகே வேனில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீஸாா் தாராபுரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
- நந்தகோபால் (25) என்பவரை கைது செய்ததுடன் 500 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசாா் பறிமுதல் செய்தனா்.
தாராபுரம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தாராபுரம் வழியாக சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக திருப்பூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீஸாா் தாராபுரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சோ்ந்த நந்தகோபால் (25) என்பவரை கைது செய்ததுடன் 500 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசாா் பறிமுதல் செய்தனா்.
Next Story






