search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே காருடன் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி

    குளச்சல் அருகே காருடன் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

    • கேரளாவுக்கு கடத்தியபோது பிடிபட்டது
    • போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை போலீசாரும், வருவாய்த்துறையினரும் அடிக்கடி சோதனை நடத்தி தடுப்பதோடு, கடத்தல் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    நேற்று இரவு தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமை யிலான பணியாளர்கள், கல்குளம் வட்டம் குளச்சல் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தே கத்திற்கு இடமாக ஒரு கார் வேகமாக வந்தது.

    அந்த காரை நிறுத்தும் படிஅதிகாரிகள் சைகை காட்டினர். இதனை தொடர்ந்து சற்று தூரம் தள்ளி கார் நிறுத்தப்பட்டது. ஆனால் அதில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை சோதனை செய்த னர். அப்போது காருக்குள் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி மூடைகளில் இருப்பது தெரியவந்தது. அதனை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அரிசி மூடைகள் உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படை க்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டது. கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×