என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    அரிசி மூடைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட வேன் மற்றும் கடத்தியவர்களுடன் போலீசார். 

    ரேஷன் அரிசி பறிமுதல்

    • அருப்புக்கோட்டை அருகே வேனில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது20), ராஜபாண்டி(28) என்பதும் தெரியவந்தது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையிலான போலீசார் மதுரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வேனை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.

    ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வேனை சோதனை செய்தனர். அதில் ஏராளமான மூட்டைகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அவற்றில் ரேசன் அரிசி இருந்தது.

    வேனில் இருந்த 20 மூட்டைகளில் மொத்தம் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் வேனில் வந்தவர்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது20), ராஜபாண்டி(28) என்பதும், அவர்கள் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேசன் அரிசியை சேகரித்து மதுரையில் உள்ள ஆலையில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அரிசி மூடைகளை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ேரசன் அரிசி மூட்டைகளை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×