search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாசகம்"

    • திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள்
    • போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.

    திருநங்கைகள் யாசகம் பெறுவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி திருநங்கைகள் யாசகம் பெற முயன்றால், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். 

    • திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையின்படி மக்கள் நல பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பணியிடத்தில் எவ்வித நியமன ஆணையும் வழங்காமல் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வரன்முறையுடன் கூடிய ஊதியத்தை கணக்கிட்டு அரசாணை வெளியிட வேண்டும்.

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் மாநில தலைவர் செல்ல பாண்டியன், மாநில பொதுச்செ யலாளர் புதியவன், மாநில பொருளாளர் ரங்கராஜ் உள்ளிட்ட ஏராள மானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும், திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நல பணியாளர்கள் பேரணியாக வந்து பொதுமக்களிடம் யாசகம் பெற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தீப திருவிழாவின் போது திருவண்ணாமலையில் 10 நாட்கள் விழா நடத்தப்படும்.
    • கிரிவலப் பாதை நெடுக வீதியுலா சென்று அண்ணாமலையார் யாசகம் கேட்பார்.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீப திருவிழாவின் போது திருவண்ணாமலையில் 10 நாட்கள் விழா நடத்தப்படும்.

    தினமும் காலை, மாலை இரு நேரமும் அண்ணாமலையார் வாகனங்களில் வெவ்வேறு வடிவங்களில் வீதி உலா வருவார்.

    இந்த விழாவின் 8ம் நாளன்று அண்ணாமலையார் பிட்சாடனார் வேடம் ஏற்று யாசகம் கேட்க செல்லும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    கிரிவலப் பாதை நெடுக வீதியுலா சென்று அண்ணாமலையார் யாசகம் கேட்பார்.

    பக்தர்கள் அன்று போட்டி போட்டு அவருக்கு பிச்சையை காணிக்கையாகப் போடுவார்கள்.

    திருவண்ணாமலையில் உள்ள பல கடைக்காரர்கள் 8ந் திருநாளன்று வசூலாகும் மொத்த பணத்தையும்

    அண்ணாமலையார் எடுக்கும் யாசகத்துக்கு கொடுத்து விடுவார்கள்.

    கடவுளே வீதிக்கு வந்து பக்தனிடம் பிச்சை கேட்பது என்பது, தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி,

    திருவண்ணாமலையில் மட்டுமே நடக்கும் அதிசய நிகழ்வாக உள்ளது.

    அண்ணாமலையார் யாசகம் கேட்பதை யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?

    எனவே பெண் பக்தர்கள் அண்ணாமலையார் சார்பில் தங்கள் முந்தானையை ஏந்தி ஓடி, ஓடி சென்று பிச்சை எடுத்து வந்து அண்ணாமலையாரிடம் கொடுப்பார்கள்.

    குறிப்பாக நகரத்தார் பெண்கள் அதிக அளவில் திரண்டு வந்து அண்ணாமலையாருக்காக தாங்களே பிச்சை எடுப்பதுண்டு.

    ஆண்டுக்கு ஒரு தடவை நடக்கும் இந்த அதிசயத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால் தீப திருவிழாவின் 8ம் நாள் விழா தினத்தன்று சென்றால் பார்க்கலாம்.

    • ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
    • மாநகரம் முழுவதும் ரோந்து சென்று யாசகம் பெறுபவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்க உள்ளோம்.

    கோவை:

    கோவையில் பல்வேறு பகுதிகளில் சிக்னல்களில் பெண்கள் மற்று முதியவர்கள் கைக்குழந்தைகளுடன் வந்து யாசகம் பெற்று வருகின்றனர்.

    இதனால் சில நேரங்களில் சிக்னல்களில் போக்கு–வரத்து பாதிக்கப்படுகிறது. இதில் சிலர் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வ–தாகவும் புகார் எழுந்தது.

    இதனை தடுக்க கோவை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    அப்போது சிக்னல்களில் யாசகம் பெறுபவர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோரை மீட்டனர். இன்று ஒரே நாளில் சுமார் 20 பேரை மீட்ட போலீசார் அவர்களை கோவையில் உள்ள காப்பகங்களில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிக்னல்களில் யாசகம் பெறுபவர்களையும், சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களையும் மீட்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இன்று மாநகரப் பகுதிகளில் ரோந்து சென்றோம். தற்போது வரை 20 பேர் வரை மீட்டுள்ளோம். தொடர்ந்து மாநகரம் முழுவதும் ரோந்து சென்று யாசகம் பெறுபவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

    ×