என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டும் மழையில் யாசகம் பெற்று நூதன போராட்டம்- பரபரப்பு
    X

    கொட்டும் மழையில் யாசகம் பெற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நல பணியாளர்கள்.

    கொட்டும் மழையில் யாசகம் பெற்று நூதன போராட்டம்- பரபரப்பு

    • திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையின்படி மக்கள் நல பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பணியிடத்தில் எவ்வித நியமன ஆணையும் வழங்காமல் பணிநியமனம் செய்யப்பட்டுள்ள மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வரன்முறையுடன் கூடிய ஊதியத்தை கணக்கிட்டு அரசாணை வெளியிட வேண்டும்.

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் மாநில தலைவர் செல்ல பாண்டியன், மாநில பொதுச்செ யலாளர் புதியவன், மாநில பொருளாளர் ரங்கராஜ் உள்ளிட்ட ஏராள மானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும், திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நல பணியாளர்கள் பேரணியாக வந்து பொதுமக்களிடம் யாசகம் பெற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×