search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர் மகேஷ்"

    • சேதமடைந்து கிடந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க உத்தரவு
    • தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வேப்ப மூடு பூங்காவை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுவதாகவும் குப்பைகள் அதிக அளவு உள்ளதாகவும் மாலைமலரில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மேயர் மகேஷ் இன்று காலை வேப்பமூடு பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    சேதமடைந்து காணப்பட்ட விளையாட்டு உபகரணங்களை பார்வையிட்ட அவர், இதை உடனடியாக மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பூங்கா முழுவதும் சுற்றி ஆய்வு மேற்கொண்டபோது பூங்காவிற்குள் புதர்கள் வளர்ந்து காணப்பட்டது. அதை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டார். அங்கு உள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி காணப்பட்டதை பார்த்த அவர், தினமும் அகற்ற அறிவுறுத்தினார்.

    கழிவறைக்கு சென்று பார்வையிட்ட மேயர் மகேஷ், தினமும் சுத்தம் செய்து பராமரிக்க உத்தர விட்டார். கழிவறையின் மேல் வளர்ந்துள்ள மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து பூங்காவிற்கு வெளிப்புறம் உள்ள நாஞ்சில் பஜாரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு கடையின் முன் பகுதியில் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து செட்டுகள் அமைத்திருந்தனர். மேலும் தற்காலிக கடைகளும் வைக்கப்பட்டுள்ளதை பார்த்து மேயர் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் தற்காலிக கடைகள் அமைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். நாஞ்சில் பஜாரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேப்பமூடு பூங்காவிற்கு நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து செல்கிறார்கள். இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் குழந்தைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு சில விளையாட்டு உபகரணங்கள் மட்டுமே சேதம் அடைந்துள்ளது.

    அதை உடனடியாக சீரமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பூங்காவில் உள்ள குப்பைகளை தினமும் அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாஞ்சில் பஜாரில் ஆக்கிரமிப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற கடைக்காரர்களுக்கு இன்று ஒரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றா விட்டால் மாநகராட்சி சார்பில் நாளை ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள 53 பூங்காவையும் புணரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்ரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 1982-ம் ஆண்டு மண்டைக்காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல.
    • 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார்.

    நாகர்கோவில்:

    தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர் கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தா மகராஜ் மண்டைக்காடு கோவிலில் நடைபெறுகின்ற சமய சொற்பொழி தொடர் பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அவருக்கு எனது கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறேன். 1982-ம் ஆண்டு மண்டைக் காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல. அது ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. இப்போது கன்னியாகுமரி மாவட்டம் அமைதி பூங்காவாக உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 20 மாதத் தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வழிகாட்டுதலின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் குடமுழுக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதிக நிதியை தமிழக முதல்வர் குமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இந்து சேவா சங்கம் என்ற பெயரில் அறநிலை யத்துறை கோவில்க ளில் உள்ள கட்டிடங் களை கையகப்படுத்தி கோவிலில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் இந்து சேவா சங்கம் நடத் தியது என கூறி வந்தனர். புகாரின் பேரில் தமிழக முதல்வர் நிகழ்ச்சிகளை அறநிலையத்துறை நடத்தும் என அறிவித்துள்ளார்.

    மண்டைக்காட்டில் ஹைந்தவ சேவா சங்கம் நடத்தும் சமய மாநாட்டில் உள்ள போஸ்டரில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பெயரை போட்டுள்ளனர். இதனால் இந்து சமய மாநாடா? அரசியல் மாநாடா? என்று தெரிந்து கொள்ள வேண் டும். மார்ச் 5-ந் தேதி மாசி கொடைவிழா சிறப்பாக நடக்கும்.

    நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தருகிறார். அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடக்கும். 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார். உங்கள் பேச்சை குறைத் துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆய்வின்போது என்ஜினீ யர் பாலசுப்ரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா ஆகியோர் இருந்தனர்.
    • இன்னும் 2 வார காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி சார்பில் புளியடியில் மின்சார தகன மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த மூன்று ஆண்டு களாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் புளியடியில் தகன மையத்தில் எல்.பி.ஜி.கேஸ் மூலம் உடலை எரிப்பதற்கான தகன மையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது.ரூ. 45 லட்சம் செலவில் அதற்கான பணி கள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். மேலும் தகன மையத்தில் கிடந்த குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பூங்காவையும் பார்வை யிட்டு மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் குடியிருந்து வரும் மக்கள் தங்களது பகுதிக்கு குடிநீர் வசதி,தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று மேயர் மகேஷிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரியிடம் பேசி உடனடியாக தெருவிளக்கு, குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதுகுறித்து மேயர் மகேஷ் கூறுகையில், புளியடியில் கூடுதலாக ரூ.45 லட்சத்தில் கேஸ் தகன மைய வேலைகள் நடைபெற்று வருகிறது. c எடுக்கப்படும். புளியடி பகுதியில் உள்ள பூங்காவை மேம் படுத்த நடவடிக்கை மேற் கொண் டுள்ளோம். மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டுவரும் வகையில் அந்த பூங்கா மேம்படுத்தப்படும். குடிசை மாற்று வாரியத்தில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது என்ஜினீ யர் பாலசுப்ரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் ஸ்ரீலிஜா ஆகியோர் இருந்தனர்.

    • பொதுமக்களிடம் குறைகள் கேட்டார்
    • சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோயில் மாநக ராட்சி பகுதியில் வார்டு வார்டாக சென்று மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இந்த ஆய்வின் போது மக்கள் தெரிவிக்கும் குறை களை சரி செய்யவும், வார்டுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு வரு கிறார்.

    அதன்படி முதற்கட்டமாக மாநகராட்சியை தூய்மைப் படுத்தவும், சாக்கடை கால்வாய்களை தூர்வாரி சாலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சாலை களின் குறுக்கே தடுப்புகள் அமைத்து இரு வழிச் சாலை யாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று 5-வது வார்டுக்கு உட்பட்ட கட்டையன்விளை பகுதியில் மேயர் மகஷே் ஆய்வு மேற்கொண்டார். பொது மக்கள் கோரிக்கையை ஏற்று கழிவு நீர் தொட்டிகள் அமைக்க ரூ.11 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து தொட்டிகள் அமைக்கப்பட உள்ள இடங்களை அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து கட்டயன் விளை ரேஷன் கடை மற்றும் வேலை முடிவுற்று திறப்பதற்கு தயார் நிலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தையும் பார்வை யிட்டார். தொடர்ந்து பொது மக்க ளிடமும் குறைகளை கேட்ட றிந்தார்.

    ஆய்வின்போது மாநகர பொறியாளர் பாலசுப்பிர மணியன், மாநகர நல அதி காரி ராம்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்த னர். இதைத் தொடர்ந்து விவசாய சங்கம் சார்பில் 45-வது வார்டு தாராவிளை பகுதியில் விவசாய இடு பொருட்கள் கொண்டு செல்ல வசதியாக சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    • 14-வது வார்டு பகுதியில் அவர், தெரு, தெருவாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் நரிக்குறவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தினமும் வார்டு வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இன்று 14-வது வார்டு பகுதியில் அவர், தெரு, தெருவாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். வார்டு பகுதியில் உள்ள பாலமோர் ரோடு, மாடன் கோவில், டென்னிசன் ரோடு, சார்லஸ் மில்லர் தெரு, மீட்தெரு, நியூ போர்ட் தெரு, எம்.எஸ்.ரோடு, டிஸ்டிலரி ரோடு, போலீஸ் ஸ்டேசன் ரோடு, கலை வாணர் தெரு, கன்னிமார் மேட்டு தெரு, முஸ்லிம் தெரு, ஓட்டுபுரைதெரு, காமராஜபுரம் மரச்சீனி விளை, வணிகர் தெரு, எம்.எஸ்.ரோடு, சாஸ்தான் கோயில் தெரு, வஞ்சி மார்த்தாண்டன் தெரு, ஆகிய பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அந்த வார்டு பகுதியில் உள்ள வடசேரி பஸ் நிலையத்தையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் நரிக்குறவர்களால் சில பிரச்சனைகள் வருகிறது. அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

    மேலும் பஸ் நிலையத்தில் எந்த வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், பொறியாளர் பாலசுப்பிர மணியன், மாநகர நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், வருவாய் ஆய்வா ளர் சுப்பையா, கவுன்சிலர் கலாராணி, தி.மு.க. மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கழிவுநீர் ஒடைகளை உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவு
    • ஆய்வின் போது கவுன்சிலர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    எம்.எஸ்‌.ரோடு, அசம்பு ரோடு, பெரிய ராசிங்கன் தெரு, ரவிவர்மன் புது தெரு, செட்டிதெரு, புளியடி தெரு, ஆறாட்டு ரோடு, சி.பி.எச்.ரோடு பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதிகளில் உள்ள கழிவுநீர் ஒடைகளை உடன டியாக சுத்தம் செய்ய உத்தர விட்டார்.

    இதைத் தொடர்ந்து பழுதான சாலைகளை சீர மைக்கவும் அறிவுறுத்தி னார். பொது மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிர மிப்புகளை உடனடியாக அப்புறப்ப டுத்தவும் மேயர் மகேஷ் உத்தர விட்டார்.

    ஆய்வின் போது கவுன்சிலர் வளர்மதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • வட்டவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
    • வட்டவிளை குளம் சீரமைக்க 47 லட்ச ருபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கு உட்பட்ட 41-வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை, ஈத்தாமொழி ரோடு, மேலபுது தெரு, பறக்கை ரோடு, பட்டாரியார் சாஸ்தா தெரு உள்ளிட்ட பகுதியில் மேயரும், தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வின் போது பொது மக்களின் கோரிக்கையை ஏற்று வட்டவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். மேலும் வட்டவிளை குளம் சீரமைக்க 47 லட்ச ருபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலா வாணி, மாமன்ற உறுப்பி னர் அனிலா, தலைமை செயற்குழு உறுப்பினர் சதா சிவன், மாநகர துணை செயலாளர்கள் வேல் முருகன், ராஜன், பகுதி செயலாளர்கள் ஷேக் மீரான், துரை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம். ஜே ராஜன் உள்ளிட்ட பலரும் ஆய்வின் போது கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட இடங்களில் மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆய்வு
    • நாகர்கோவில் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலை சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில் தெரு, பார்வதிபுரம், நெசவாளர் காலனி உள்ளிட்ட இடங்களில் மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வீடுகளில் இருந்து கழிவு நீர் முறையாக வெளியேற்றப்பட வேண்டும். தெருக்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்று மேயர் வலியுறுத்தினார். மேலும், மோசமான சாலைகள், தெருக்கள் சீரமைக்க தேவையான மதிப்பீடுகள் தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணன் கோவில் சன்னதி தெருவில் ரூ.11 லட்சம் செலவில் பேவர் பிளாக் சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் .

    பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறுகையில்:-

    நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தூய்மைப்பணி மேற்கொண்டு வருகிறோம்.வார்டுகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. வருகிற 2-ந்தேதி நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு குமரி மாவட்டம் வருகிறார் .அவரிடம் நாகர்கோவில் மாநகராட்சியில் மேற் கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி நிதி கேட்கப்படும்.குடிநீர் பிரச்சனை உட்பட அடிப்படை பிரச்சி னைகளை தீர்க்கவும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

    நகர் நல அலுவலர் ராம்குமார், மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர்கள் கவுசிக் , ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஷேக் மீரான், மாநகர துணை செயலாளர் வேல் முருகன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே.ராஜன், வட்ட செய லாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 3-வது வார்டு பகுதி யில் எஸ்.எஸ். நகர் மேற்கு பகுதி விரிவாக்கம் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
    • மேலும் அப்பகுதி மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்திட 110 கிலோ வாட் மின் மாற்றியையும் மேயர் மகேஷ் இயக்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் செல்வ குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில், அக்.13-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 35-வது வார்டு பகுதியில் மேயர் மகேஷ் தெரு, தெரு வாக நடந்து சென்றும், இரு சக்கர வாகனத்தில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தெருக்களில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றிடவும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். மேலும் கழிவு நீர் ஓடை கள் உடனடியாக சுத்தம் செய்து சுகாதாரம் பாது காக்கப்படும் என பொது மக்களிடம் மேயர் மகேஷ் உறுதி அளித்தார்.

    ஆய்வின்போது மாநகர பொறியாளர் பாலசுப்பிர மணியன், நிர்வாக அதிகாரி ராம்மோகன், தி.மு.க. மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த், துணை செயலாளர் வேல்முருகன் மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் கலாராணி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    3-வது வார்டு பகுதி யில் எஸ்.எஸ். நகர் மேற்கு பகுதி விரிவாக்கம் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

    மேலும் அப்பகுதி மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்திட 110 கிலோ வாட் மின் மாற்றியையும் மேயர் மகேஷ் இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் செல்வ குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நோயாளிகள் சிரமத்தை குறைக்க நடவடிக்கை
    • அங்கன்வாடி மையத்துக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று திடீரென சென்று ஆய்வு நடத்தினார். அங்குள்ள மருந்தகம், தடுப்பூசி போடும் பிரிவு, கணினி அறை உள்ளிட்ட பல இடங்களை ஆய்வு செய்தார்.

    அப்போது சுகாதார நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்கி கிடந்தது. மேலும் ஆங்காங்கே கற்க ளும், மரக்கட்டைகளும் கிடந்தன. அவற்றை பார்வை யிட்ட மேயர் மகேஷ், அவற்றை உடனே அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    சுகாதார நிலையத்தில் கை கழுவும் வாஷ் பேஷனை சீரமைத்து தர வேண்டும் என்றும், சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலை யத்தில் படிக்கட்டு வசதி சரி வர இல்லை. இதனால் நோயாளிகள் சிரமப்படு கிறார்கள் என்றும் பணியா ளர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் அவர்களிடம் கூறினார். பின்னர் சுகாதார நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    முன்னதாக அழகம்மன் கோவில் அருகே சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். அதோடு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினத்தையொட்டி கோட்டார் கவிமணி பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும் மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி,மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர்கள் அக்‌ஷயா கண்ணன், கலாவாணி, ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் புகாரை தொடர்ந்து நடவடிக்கை
    • அம்மா உணவகத்தில் உணவின் தரத்தை பார்வையிட்ட மேயர் சாப்பிட்டு பார்த்தார்.

    நாகர்கோவில்:

    ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்கப்படவில்லை என்று மாநகராட்சி மேயர் மகேசுக்கு புகார்கள் சென்றது.

    இதையடுத்து இன்று மதியம் மாநகராட்சி மேயர் மகேஷ் திடீரென அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வழங்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவின் தரத்தை பார்வையிட்ட அவர் அதை சாப்பிட்டு பார்த்தார். அவருடன் மாநகர நகர் நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.

    மேயர் மகேஷ் ஆய்வு நடத்திய போது மதிய உணவு விநியோகம் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் உணவு வாங்க நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது உணவு விநியோகம் தொடர்பாக உள்ள பண இருப்பு விவரத்தை ஆய்வு செய்ய மேயர் உத்தரவிட்டார் .

    இதையடுத்து சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் பில்லிங் எந்திரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து உணவகத்தில் இருந்த உணவு இருப்பு விவரத்தை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது மாநகரச் செயலாளர் ஆனந்த் , ஒன்றிய செயலாளர் மதியழகன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    • கன்னியாகுமரிக்கு வருகிற 7-ந் தேதி ராகுல்காந்தி பாத யாத்திரையில் பங்கேற்க வரும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
    • இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகரிலிருந்து 3000 பேர் கலந்து கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி செயலாளர் மற்றும் நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.

    மாநகர் அவைத்தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேயரும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் கட்சி மேலிடம் அறிவித்த வேட்பாளரை எதிர்த்து தி.மு.க போட்டி வேட்பாளர் களம் இறங்கினார். அவருக்கு பாரதிய ஜனதா வழி மொழிந்தது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாரதிய ஜனதா தான் தி.மு.க.விற்கு எதிரி கட்சி. அந்தக் கட்சியுடன் சிலர் கூட்டணி வைத்துக்கொண்டு நம்மை பற்றி குறை கூறி வருகிறார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். எதிரியாக இருந்தாலும் அவர்களை அரவணைத்து கொள்ளவேண்டும். பழிவாங்கும் எண்ணம் இருக்கக் கூடாது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அந்த பிரச்சனைகளை தீர்க்க கவுன்சிலருடன் இணைந்து நான் பாடுபடுவேன். கன்னியாகுமரியில் வருகிற 7-ந் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்குகிறார் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகைதரும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகரிலிருந்து 3000 பேர் கலந்து கொள்ள வேண்டும்.கிழக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 10,000 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநகர செய லாளர் வழக்கறிஞர் ஆனந்த், துணை செயலாளர்கள் வேல் முருகன், ராஜன், பொருளாளர் சுதாகர், பகுதி செயலாளர்கள் ஜீவா, ஷேக் மீரான், ஜவகர், துரை உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    திமுக அரசின் சாத னைகளை விளக்கி தெருமுனை கூட்டங்கள், பொது கூட்டங்கள் நடத்த வேண்டும்.இளைஞரணி உறுப்பினர்கள் சேர்ப்பதை முழுமூச்சுடன் செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×