என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் கழிவு நீர் ஓடைகளை சீரமைத்து சுகாதாரம் பராமரிக்கப்படும் வார்டுகளில் ஆய்வு செய்த பின்னர் மேயர் மகேஷ் உறுதி
- 3-வது வார்டு பகுதி யில் எஸ்.எஸ். நகர் மேற்கு பகுதி விரிவாக்கம் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
- மேலும் அப்பகுதி மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்திட 110 கிலோ வாட் மின் மாற்றியையும் மேயர் மகேஷ் இயக்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் செல்வ குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில், அக்.13-
நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 35-வது வார்டு பகுதியில் மேயர் மகேஷ் தெரு, தெரு வாக நடந்து சென்றும், இரு சக்கர வாகனத்தில் சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தெருக்களில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றிடவும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். மேலும் கழிவு நீர் ஓடை கள் உடனடியாக சுத்தம் செய்து சுகாதாரம் பாது காக்கப்படும் என பொது மக்களிடம் மேயர் மகேஷ் உறுதி அளித்தார்.
ஆய்வின்போது மாநகர பொறியாளர் பாலசுப்பிர மணியன், நிர்வாக அதிகாரி ராம்மோகன், தி.மு.க. மாநகர செயலாளர் வக்கீல் ஆனந்த், துணை செயலாளர் வேல்முருகன் மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் கலாராணி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
3-வது வார்டு பகுதி யில் எஸ்.எஸ். நகர் மேற்கு பகுதி விரிவாக்கம் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
மேலும் அப்பகுதி மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்திட 110 கிலோ வாட் மின் மாற்றியையும் மேயர் மகேஷ் இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் செல்வ குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






