search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடிவீஸ்வரம்"

    • மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
    • தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், தெங்கம் புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்க மங்கலம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழ மை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., மேல மணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்ம புரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், அனத்தங்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன் கோட்ைட, காரவிளை, பருத்திவிளை, வைராக்குடி, கணபதிபுரம், தெக்கூர்,

    தெக்குறிச்சி, காக்காதோப்பு, பழவிளை, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரிய மாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு மற்றும் ராமவர்மபுரம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை நாகர்கோவில் மின் வினி யோக செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • ஆணையர் ஆனந்த்மோகன் ஆய்வு
    • பொதுமக்கள் 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து பைப் லைன் மூலமாக குடிநீர் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்பொழுது ஒரு சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்ப டுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். வடிவீஸ்வரம் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கூறினார்கள்.தொடர்ந்து பொதுமக்களும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் வடிவீஸ்வரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று எத்த னை நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து விவரங்களை கேட்டு அறிந்தார்.

    அப்போது பொதுமக்கள் 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவ தாக தெரிவித்தனர். உடனடியாக பொதுமக்க ளுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய ஆனந்த்மோகன் உத்தர விட்டார்.

    இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    • நோயாளிகள் சிரமத்தை குறைக்க நடவடிக்கை
    • அங்கன்வாடி மையத்துக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று திடீரென சென்று ஆய்வு நடத்தினார். அங்குள்ள மருந்தகம், தடுப்பூசி போடும் பிரிவு, கணினி அறை உள்ளிட்ட பல இடங்களை ஆய்வு செய்தார்.

    அப்போது சுகாதார நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்கி கிடந்தது. மேலும் ஆங்காங்கே கற்க ளும், மரக்கட்டைகளும் கிடந்தன. அவற்றை பார்வை யிட்ட மேயர் மகேஷ், அவற்றை உடனே அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    சுகாதார நிலையத்தில் கை கழுவும் வாஷ் பேஷனை சீரமைத்து தர வேண்டும் என்றும், சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலை யத்தில் படிக்கட்டு வசதி சரி வர இல்லை. இதனால் நோயாளிகள் சிரமப்படு கிறார்கள் என்றும் பணியா ளர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் அவர்களிடம் கூறினார். பின்னர் சுகாதார நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    முன்னதாக அழகம்மன் கோவில் அருகே சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். அதோடு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினத்தையொட்டி கோட்டார் கவிமணி பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும் மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி,மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர்கள் அக்‌ஷயா கண்ணன், கலாவாணி, ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×