search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டுப்பாளையம்"

    • 84 ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
    • பொதுமக்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பலர் ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் மீது பொதுமக்கள், அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த ஓராண்டு காலமாக மாவட்ட கலெக்டருக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கோவை மாவட்டத்தில் உள்ள 84 ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதில் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த செயலா ளர்களும் பணியிடமா ற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அன்னூர் ஒன்றிய பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இது போன்ற நடவடி க்கையில் ஈடுபட்ட மாவட்ட கலெக்டருக்கு காரமடை வழிக்காட்டி அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    • பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக தகவல் வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை அருகில் பவானி ஆற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் ஆணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பில்லூர் அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மேட்டுப்பாளையத்தில் உள்ள 9 அரசு தொடக்கப்ப ள்ளியில் உள்ள 1,119 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது.
    • மாணவ, மாணவிகளுக்கு ரவை, சேமியா கேசரி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் மாலதி, நகராட்சி

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையத்தில் உள்ள 9 அரசு தொடக்கப்ப ள்ளியில் உள்ள 1,119 மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்-அமைச்சரின் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா நடூர் நகரவை தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு நகர மன்ற தலைவர் மெஹரிபாபர்வீன் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சிக்கு துணைத்தலைவர் அருள்வடிவு முனுசாமி, வருவாய் கோட்டாச்சியர் பூமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு ரவை, சேமியா கேசரி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் மாலதி, நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், உதவி பொறியாளர் அனிதா, நகர செயலாளர்கள் முகமதுயூனுஸ், முனுசாமி, நகர மன்ற உறுப்பினர் குழு தலைவர் முகமதுஉசேன், நகர மன்ற உறுப்பினர்கள் ஓ.கே.நடராஜ், சிவமலர், சுமதி, விஜய்கான்டீபன், உமாராணி கணேசன், ரவிக்குமார், வருவாய் ஆய்வாளர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர் யாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

    • அன்னூர் சாலையில் தாளத்துறை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்
    • 16 கிராம் எடையுள்ள ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் நேற்று சிறுமுகை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு அன்னூர் சாலையில் தாளத்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையம் சேரன் நகர் 2 பகுதியை சேர்ந்த ெசபாஸ்டியன் (21), சிறுமுகை அருகே அன்னூர்‌ சாலை டி.ஆர்.எஸ். ஹவே சிட்டி பகுதியை சேர்ந்த மார்சல் (22), சேரன் நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் (19) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவர்களிடம் 16 கிராம் எடையுள்ள ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூர் பகுதியில் இருந்து இந்த போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக கூறியுள்ளனர்.

    மேலும் இதனை இவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து பயன்படுத்த ஒன்றாக சென்றுள்ளனர். இதையடுத்து சிறுமுகை போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    மேட்டுப்பாளையம், -

    மேட்டுப்பாளையம் கோட்டத்திற்குட்பட்ட பவானி பேரேஜ் , மருதூர் துணை மின் நிலையம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பவானி மேரேஜ் 1, சுக்குகாப்பி கடை, சமயபுரம், ராமேகவுண்டன்புதுார், பத்திரகாளியம்மன் கோவில் பகுதிகள், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்ஜேகவுண்டன்புதூர், கெண்டேபாளையம், தொட்ட தாசனுார், மற்றும் குந்தா பீடரில் உள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் அதில் உள்ள மின்நுகர்வோர்கள்.

    மருதூர் துணை மின்நிலையம்: காரமடை லாரி உரிமையாளர் பங்கிற்கு தென்புரம் உள்ள பகுதிகள் முழுவதும், சின்ன காரனூர், சர்வால் பீடர் கண்ணார்பாளையம் ரோடு மட்டும், அர்ச்சனா கார்டன், எஸ்.ஆர்.எஸ்.ஐ பீடரில் படியனூர் வாட்டர் பம்பு அவுஸ் வரை மற்றும் காரமடை மேற்கு பகுதிகளான குந்தா காலனி, திம்மம்பாளையம், புங்கம்பாளையம், செல்லப்பனுார், மருதூர் , தேவனாதபுரம், சுள்ளி பாளையம், புஜங்கனுார், பிளிச்சி கவுண்டனூர், கணுவாய் பாளையம், தாயனூர், தோலம்பாளையம், பணப்பாளையம், சீளியூர், நீலாம்பதி, மேல்பாவி, சாலைவேம்பு, கண்டியூர், வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர், சுண்டக்கொரை, முத்துக்கல்லூர், பில்லூர் குடிநீர், வெள்ளியங்காடு குடிநீர், நெல்லித்துறை குடிநீர், தேக்கம்பட்டி குடிநீர் காரமடை, தேக்கம்பட்டி குடிநீர் இணைப்புகள் போன்ற இடங்களில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மேட்டுப்பாளையம் மின் செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    • தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் போலீசில் புகார் செய்தார்.
    • தொழிலாளியுடன் தங்கியிருந்த நண்பரை போலீஸ் ேதடுகிறது

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கீழ் பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் சையது முகமது மகன் முஸ்தபா (46). ஊட்டி டவுன் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.

    இவருடைய அண்ணன் ஜெய்னுதீன்(50). திருமணம் ஆகி தனியாக வாழ்ந்து வந்தார். அவ்வப்போது மேட்டுப்பாளையம் வந்து தங்கி கூலி வேலை செய்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை முஸ்தபாவின் உறவினர் அப்பாஸ் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உனது அண்ணன் ஜெய்னுதீன் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் இருப்பதாக தகவல் அளித்தார்.

    உடனே முஸ்தபா மற்றும் அவருடைய அண்ணன் சலீம் ஆகியோர் மேட்டுப்பாளையம் வந்து அரசு மருத்துவமனை வந்து ஜெய்னுதீனின் உடலைப் பார்த்தனர்.

    அப்பாஸிடம் விசாரிக்கையில், ஜெய்னுதீன் கடந்த 7 ந் தேதி அவருடன் வேலை செய்யும் ஊட்டியை சேர்ந்த ஜெயராம் என்பவருடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருந்தார்.

    மது குடித்துவிட்டு இரவு 10 மணிக்கு படிக்கட்டு அருகே படுத்திருந்தவர் படியிலிருந்து புரண்டு கீழே விழுந்து பின்பக்க தலையில் அடிபட்டு இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த நிலையில் முஸ்தபா மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தனது அண்ணன் ஜெய்னுதீன் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மேட்டு ப்பாளையம் இ ன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெ க்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயினுதியுடன் தங்கி இருந்த ஜெயராமனை தேடி வருகின்றனர். மேலும் ஜெய்னுதீன் சாவு இயற்கையானதா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • 3 ஏக்கர் விவசாய நிலத்தில் ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகிறார்.
    • பெண் கன்று சிறுத்தை தாக்கி இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வெள்ளியங்காடு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் முத்துகல்லூர், சுண்டகரை, பீளியூர், சோலமலை கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் அதிகமானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கிராமத்தையொட்டி 3 கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த வன பகுதி உள்ளது.

    அந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி சிறுத்தை, காட்டு பன்றி, யானைகள் ஊருக்குள் புகுந்து வருகிறது. அவை விவசாயிகளின் விளைநிலங்களை சேதப்படுத்தியும், கால்நடைகளை தாக்கியும் வருகிறது.

    இதனால் ெபாதுமக்கள், விவசாயிகள் அச்சமும், கவலையும் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் முத்துகல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலத்தில் ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகிறார்.

    இவர் நேற்று தனது கால்நடைகளை மேய்சலுக்கு விட்டு இரவு பட்டியில் அடைத்து வைத்து வீட்டுக்கு சென்றார். இன்று காலை வழக்கம்போல கிருஷ்ணசாமி தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு பட்டியில் இருந்த 1½ வயது பெண் கன்று சிறுத்தை தாக்கி இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவர் காரமடை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையின் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த கன்றை பார்வையிட்டனர். மேலும் அங்கு சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி உள்ளதா, கன்றை சிறுத்தை தான் தாக்கியதா என ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது,

    இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டம் இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நாய் ஒன்றை சிறுத்தை அடித்து கொண்றது. சுண்டகரை பகுதியில் 2 கன்றையும் அடித்து கொன்றது.

    இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையின் கண்காணித்து அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.

    • சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய முருகன் கோவில் சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் திருப்பணிகள் 38 ஆண்டுகளுக்கு பின் தற்போது முடிவடைந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த கோவில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இதுவரை இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்த அளவில் இருந்து வந்தது. ஆனால் கோவிலின் குடமுழுக்கு பணிகள் முடிந்த பின் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    மேலும் இக்கோவிலின் சிறப்பே பவானி ஆற்றங்கரை யில் இருப்பது தான். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் தண்ணீரில் அடித்து செல்லும் நிலை ஏற்படும்.

    எனவே கோவிலை ஒட்டி பவானி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட படித்துறை அமைப்பதுடன் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், உதவி பொறியாளர் அனிதா மற்றும் வார்டு உறுப்பினர் விஜயகாண்டிபன், ஒப்பந்ததாரர் செல்வராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கோயில் பகுதியில் படித்துறை கட்டுவதற்கு நகராட்சி தலைவர், ஆணையாளரிடம் தெரிவிக்கப்படும் என பொறியாளர் சோமசுந்தரம் கூறினார். 

    • கேரளாவில் இருந்து மண்டிகளுக்கு வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளது.
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

     மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, பெரியவெங்காயம் மண்டிகள் ஊட்டி சாலையிலும், கேரட், பீன்ஸ், நூல்கோல், டர்னிப், முள்ளங்கி, மேராக்காய், பீட்ரூட், பஜ்ஜி மிளகாய் மண்டிகள் அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் பகுதியிலும் செயல்பட்டு வருகின்றன.

    இதில் உருளைக்கிழங்கு மண்டி பகுதிகளில் இருந்து அதிகளவில் கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜடையம்பாளையம் புதுமார்க்கெட் பகுதியில் இருந்தும் திருச்சி, சென்னை, மதுரை மற்றும் கேரளா மாநிலத்திற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் கேரளாவில் நாளை மறுநாள் (8-ந் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையில் விருந்தினர்களுக்கு காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தங்களே அதிகம் பரிமாறப்படும்.

    இதனால் கேரளாவில் இருந்து இந்த மண்டிகளுக்கு வியாபாரிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் 45 கிலோ எடை கொண்ட கர்நாடகா மாநிலம் திம்பம் பகுதியை வரும் உருளைக்கிழங்கு ஒரு துண்டு ரூ.1,300 முதல் ரூ.1,700 வரையும், ஹாசன் பகுதியில் இருந்து வரும் கிழங்கு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரையும், ஆக்ரா கிழங்கு ரூ.1,100 முதல் ரூ.1,300, குஜராத் கிழங்கு ரூ.1,050 முதல் ரூ.1,300, ஊட்டி கிழங்கு ரூ.1,800 முதல் ரூ.2,200 வரை விற்பனை செய்யப்படுகிறது.இதே போல் ஜடையம்பாளையம் புதுமார்க்கெட் பகுதியில் மேரக்காய் 1 கிலோ ரூ.12 முதல் ரூ.13 வரையும் பீட்ரூட் ரூ.25 முதுல் ரூ.45, கேரட் ரூ.65 முதல் ரூ.110, பீன்ஸ் ரூ.60 முதல் ரூ.70, கோஸ் ரூ.8 முதல் ரூ.15, நூல்கோல் ரூ.68 முதல் ரூ.80 வரையும், டர்னிப் ரூ.50 முதல் ரூ.80, முள்ளங்கி ரூ.10முதல் ரூ.20 வரையும், பஜ்ஜி மிளகாய் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வியாபாரிகள் அதிகளவில் வந்து காய்கறிகளை கொள்முதல் செய்து செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணியர் சுவாமி கோவில் பவானி ஆற்றங்கரையில் உள்ளது.

    இக்கோவிலில் 1984-ம் ஆண்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சுப்ரமணியர், சிவன், அம்பாள் விக்கிரஹங்கள் புதிதாக பிரதிஷ்டம் செய்து திருவருள் கூட்டி உள்ளது.

    தற்போது கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    தொடர்ந்து அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை புண்யாகவாசனம், தனபூஜை கணபதி மற்றும் நவகிரக ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபெற்றது.

    தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடந்தது.

    காலை 6.40 மணிக்கு கலசங்கள் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. 6.55 மணிக்கு மூலஸ்தான விமானம், பரிவார விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு மகாகும்பாபிஷகமும், 7.05 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமி முருகன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    கோவில் கும்பாபிஷே கத்தை கோவை சீரவை ஆதினம் குமரகுருபர சுமாமிகள் செய்து வைத்தார்.கும்பாபிஷேக விழாவில் மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 7 மணிக்கு சுப்பிரமணிய முருகன் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பவானி ஆற்றில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடத்திவருகிறார்கள்.

    கோவை:

    மேட்டுப்பாளையம் ஆத்துப்பாலம் அருகே உள்ள நெல்லித்துறை பவானி ஆற்றில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என விசாரணை நடத்திவருகிறார்கள். 

    • வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • மண்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது.

    இதில் 6 வார்டு பகுதியில் உருளைக்கிழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம், சாக்கு உள்ளிட்ட மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இதன்மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து உருளைக்கி ழங்கு, பூண்டு, பெரிய வெங்காயம் சாக்கு உ ள்ளிட்டவை ஏற்றுமதி, இறக்குமதி மேற்கொள்ள ப்படுகிறது. ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பகுதிகளில் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.

    இதில் மேட்டு ப்பாளையம் உருளைக்கி ழங்கு மண்டி பகுதிகளில் பாக்குகார சாலை செல்லும் வழியில் உள்ள கிழங்கு மண்டி சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இச்சாலை வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகாஜன பள்ளி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மக்கள் சென்று வரும் வழியாக உள்ளது. மேலும் நெல்லித்துறை சாலை வழியாக தினசரி நிலகீரி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய வாகனங்களில் எடுத்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் இச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்களும், வியாபா ரிகளும் பெரும் அலைச்சலுக்கு உள்ளாகி வருகின்றன. எனவே இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டியின் உபதலைவர் எம்.என்.கோபால், செயலாளர் பி.ரங்கசாமி ஆகியோர் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி பகுதியில் தினசரி கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இத ன்மூலம் ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உள்ளது.

    இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் உருளைக்கிழங்கு மண்டி பகுதிகளில் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×