search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The price of potatoes"

    • கேரளாவில் இருந்து மண்டிகளுக்கு வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளது.
    • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

     மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, பெரியவெங்காயம் மண்டிகள் ஊட்டி சாலையிலும், கேரட், பீன்ஸ், நூல்கோல், டர்னிப், முள்ளங்கி, மேராக்காய், பீட்ரூட், பஜ்ஜி மிளகாய் மண்டிகள் அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் பகுதியிலும் செயல்பட்டு வருகின்றன.

    இதில் உருளைக்கிழங்கு மண்டி பகுதிகளில் இருந்து அதிகளவில் கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜடையம்பாளையம் புதுமார்க்கெட் பகுதியில் இருந்தும் திருச்சி, சென்னை, மதுரை மற்றும் கேரளா மாநிலத்திற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் கேரளாவில் நாளை மறுநாள் (8-ந் தேதி) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையில் விருந்தினர்களுக்கு காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட உணவு பதார்த்தங்களே அதிகம் பரிமாறப்படும்.

    இதனால் கேரளாவில் இருந்து இந்த மண்டிகளுக்கு வியாபாரிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் 45 கிலோ எடை கொண்ட கர்நாடகா மாநிலம் திம்பம் பகுதியை வரும் உருளைக்கிழங்கு ஒரு துண்டு ரூ.1,300 முதல் ரூ.1,700 வரையும், ஹாசன் பகுதியில் இருந்து வரும் கிழங்கு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரையும், ஆக்ரா கிழங்கு ரூ.1,100 முதல் ரூ.1,300, குஜராத் கிழங்கு ரூ.1,050 முதல் ரூ.1,300, ஊட்டி கிழங்கு ரூ.1,800 முதல் ரூ.2,200 வரை விற்பனை செய்யப்படுகிறது.இதே போல் ஜடையம்பாளையம் புதுமார்க்கெட் பகுதியில் மேரக்காய் 1 கிலோ ரூ.12 முதல் ரூ.13 வரையும் பீட்ரூட் ரூ.25 முதுல் ரூ.45, கேரட் ரூ.65 முதல் ரூ.110, பீன்ஸ் ரூ.60 முதல் ரூ.70, கோஸ் ரூ.8 முதல் ரூ.15, நூல்கோல் ரூ.68 முதல் ரூ.80 வரையும், டர்னிப் ரூ.50 முதல் ரூ.80, முள்ளங்கி ரூ.10முதல் ரூ.20 வரையும், பஜ்ஜி மிளகாய் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வியாபாரிகள் அதிகளவில் வந்து காய்கறிகளை கொள்முதல் செய்து செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    ×