search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை"

    • மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்னும், 2வது இன்னிங்சில் 418 ரன்னும் எடுத்தது.
    • விதர்பா முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மும்பை:

    89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷர்துல் தாகூர் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 75 ரன்னில் ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா 46 ரன்னும், லால்வாணி 37 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா சார்பில் யாஷ் தாகூர், ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுத்தார்.

    மும்பை சார்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. முஷீர் கான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு உறுதுணையாக ரகானே அரை சதமடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் அய்யர் 95 ரன்னில் வெளியேறினார். ஷம்ஸ் முலானி 50 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மூன்றாம் நாள் முடிவில் விதர்பா அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் இரு நாட்கள் மீதமுள்ள நிலையில் விதர்பா அணி வெற்றிபெற 528 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • மும்பை விமான நிலையத்திற்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங்குடன் காரில் ஜோடியாக வந்தார்
    • 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பளபளப்பான உடல் தோற்றத்தில் தீபிகா ஜொலித்தும் காணப்பட்டார்

    பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோன்- ரன்வீர்சிங்2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் தங்கள் கர்ப்பத்தை அறிவித்தனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும்,செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க போவதாகவும் அதில் தெரிவித்தனர். 

    தீபிகா படுகோனே கர்ப்பமாக உள்ள தகவல் அறிந்ததும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்த்தினார்கள் .கடந்த சில நாட்களுக்கு முன் முகேஷ் அம்பானி வீட்டு திருமண முன் வைபவ நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் ஜோடியாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில் இன்று மதியம் மும்பை விமான நிலையத்திற்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர்சிங்குடன் காரில் ஜோடியாக வந்தார்.அதன் பின் தீபிகா மட்டும் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் சென்றார்.அவரை ரன்வீர் சிங் வழியனுப்பி வைத்தார்.

    ரன்வீர்சிங்- தீபிகா படுகோன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த தகவல் அறிந்ததும் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்தனர். அவரும் புன்முறுவலுடன் தாராளமாக 'போஸ்' கொடுத்தார்.

    அதன்பின் விமான நிலைய பாதுகாப்பு சோதனை பகுதியை நோக்கி சென்றார்.தீபிகா நீலநிற டெனிம் பேண்ட், பிரவுன் நிற ஸ்வெட்டர், பிரவுன் 'பூட்ஸ்' அணிந்து இருந்தார். மேலும் கருப்பு நிற 'கூலிங் கிளாஸ்' கண்ணாடியும் அணிந்தும் 'ஸ்டைல்' ஆக இருந்தார். 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பளபளப்பான உடல் தோற்றத்தில் தீபிகா ஜொலித்தும் காணப்பட்டார்.

    • மனோஜ் விடுமுறையில் சென்றதால், அமித் குமார் லாக்கர்களை பாதுகாக்கும் பணியில் இருந்தார்
    • மஸ்கே திருடிய பாக்கெட்டுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடிக்கு மேல் என தெரிந்தது

    மும்பை நகரின் முலுண்ட் (Mulund) பகுதியில் உள்ளது, பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India). தங்க நகைக்கடன் சேவைக்கான பிரத்யேக கிளையாக முலுண்ட் எஸ்பிஐ (SBI) செயல்பட்டு வந்தது.

    இந்த வங்கி கிளையில் பணிபுரிந்து வந்தவர் அமித் குமார் (Amit Kumar).

    கடந்த மாதம் பிப்ரவரி 27 அன்று, அவருடன் பணிபுரிந்து வந்த 33-வயதான மனோஜ் மாருதி மஸ்கே (Manoj Maruti Mhaske) என்பவர் விடுமுறையில் சென்றிருந்ததால், அமித் குமாரிடம் லாக்கர்களை பாதுகாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

    தனது அன்றாட பணிகளில் ஒன்றான, தினசரி லாக்கர் பொருட்கள் கணக்கெடுப்பு பணியின் போது அமித் குமார் லாக்கர்களில் இருந்த தங்க நகை பாக்கெட்டுகள் குறைவதை கண்டார்.


    பிப்ரவரி 26 வரை 63 தங்க நகை கடன்கள் வழங்கப்பட்டதால், 63 பாக்கெட்டுகள் இருக்க வேண்டிய இடத்தில் அதற்கு பதில், 4 மட்டுமே இருந்தன.

    மீதம் 59 பாக்கெட்டுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அமித், மஸ்கேவை தொடர்பு கண்டு இது குறித்து கேட்டார்.

    தங்க நகை பொட்டலங்களை தான் எடுத்து வேறொரு இடத்தில் வைத்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் திரும்ப ஒப்படைப்பதாகவும் மஸ்கே தெரிவித்தார்.

    இதையடுத்து, அமித் குமார் தனது மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறினார்.

    மஸ்கே திருடிய தங்க நகை பாக்கெட்டுகளில் உள்ள தங்கத்தின் மதிப்பு, சுமார் ரூ.3 கோடிக்கு மேல் என கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

    இதையடுத்து, மஸ்கே வங்கி கிளைக்கு வரவழைக்கப்பட்டார்.

    தான் திருடியதை ஒப்புக் கொண்ட மஸ்கே, சில நாட்களில் அனைத்து நகைகளையும் தந்து விடுவதாக மேலதிகாரிகளிடம் தெரிவித்தார்.


    இதை தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் பாண்டுப் (Bhandup) காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தனர்.

    மஸ்கே மீது இ.பி.கோ. (Indian Penal Code) சட்டத்தின் 409-வது பிரிவின் கீழ் (நம்பிக்கை மோசடி) வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

    மஸ்கேவிடம் உள்ள நகைகளை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஷார்க் சர்க்யூட் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
    • தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாக கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர்.

    மும்பை அருகே தானே டோம்பிவலியில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கட்டிடங்கள் முழுவதும் தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாகவே கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர். பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், தீயை அணைக்கும் முயற்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லோதா குடியிருப்பு வளாகத்தில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து ஷார்ச் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் 11 வது தளத்தில் ஏற்பட்ட தீ, 18 வது மாடி வரை பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

    • அம்பர் என்றால் ஆகாயவெளி, நாதர் என்றால் இறைவன்.
    • அம்பர்நாத் என்ற இடத்தில் பழங்கால சிவன் கோவில் ஒன்று உள்ளது.

    சிவலிங்கம் இல்லாத சிவன் கோவில்

    மகாராஷ்டிர மாநிலத்தில் முக்கிய பெருநகரான மும்பைக்கு புறநகராக விளங்கும் அம்பர்நாத் என்ற இடத்தில் பழங்கால சிவன் கோவில் ஒன்று உள்ளது. தலத்தின் பெயரும் அம்பர்நாத்

    அம்பர் என்றால் ஆகாயவெளி, நாதர் என்றால் இறைவன்.

    இங்கே மூலஸ்தானத்தில் சிவலிங்கமோ, நடராசர் சிலையோ காணப்படவில்லை.

    ஈசன் அணியும் புலித்தோல் போலத் தரையை அமைந்திருக்கிறார்கள்.

    கோவிலைச் சுற்றிலும் மாமரங்கள், நான்கு வாயில்களில் மேற்கு வாயிலில் மட்டும் நந்தி தேவர் உள்ளார்.

    இதன் வழியாக உள்ளே செல்லும் பக்தர்களுக்கு அர்ச்சகர் மஞ்சள் கயிறைக் கட்டி விடுகிறார்.

    சுற்றிலும் சாம்பிராணி ஊதுபத்தி வாசனை வருகிறது.

    கருவறை என்று சொல்லப்படும் இடத்தில் சிறிய பள்ளம் காணப்படுகிறது.

    இந்த பள்ளத்தை தான் சிவபெருமான் என்று கூறுகின்றனர்.

    கருவறை சற்று தாழ்வான பகுதியில் உள்ளது. பள்ளத்திற்கு பூஜைகள் எதுவுமே கிடையாது.

    அருகில் உள்ள வெட்ட வெளிமேடையில் சிவ பக்தர்கள் பாடிக் கொண்டே ஆலயத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    மகாராஷ்டிராவில் கெங்கன் என்ற பகுதியை ஆட்சி செய்த சில்காரா அரச பரம்பரையில் வந்த சித்தராஜன் கடம்பவன அரசர்களைப்போர் செய்து வெற்றி பெற்றான்.

    அந்த வெற்றிக்கு காணிக்கையாக இந்த ஆலயத்தை கி.பி. 1060&ல் அமைத்ததாக கல்வெட்டு கூறுகிறது.

    காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கிற இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகமாக நடக்கும்.

    மும்பை வாசிகள் அனைவரும் இங்கே கூடுவார்கள். அம்பர்நாத் ரெயிலடியிலிருந்து மிக அருகில் உள்ளது.

    மும்பை செல்வோர் வணங்கி வர வேண்டிய அதிசய கல்வெட்டுக் கோவில் இது.

    • தனது ராஜினாமாவை இவ்வாறு ஒரு நீதிபதி அறிவிப்பது இது முதல் முறை
    • டிசம்பர் 2025ல் அவர் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்

    மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பெஞ்சை சேர்ந்த உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, ரோஹித் தியோ, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இத்தகவலை அவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களும், வழக்காடுபவர்களும் கூடியிருந்த போது, அனைவரும் அறியும்படி அறிவித்தார்.

    ஒரு நீதிபதி இவ்வாறு தனது ராஜினாமாவை அறிவிப்பது இது முதல் முறை என தெரிகிறது.

    நேற்று தனது ராஜினாமா குறித்து அறிவித்த நீதிபதி ரோஹித், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    அவர் அப்போது அறிவித்ததாவது:

    நீதிமன்றத்தில் உள்ள உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களை கடிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்; உங்களை காயப்படுத்த அல்ல. உங்கள் அனைவரையும் என் குடும்ப உறுப்பினர்கள் போல்தான் நான் கருதுகிறேன். என் சுயமரியாதைக்கு எதிராக என்னால் பணி செய்ய முடியாது. நான் என் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இதை உங்களிடம் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி ரோஹித் தெரிவித்தார்.

    அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு அனுப்பி உள்ளார்.

    ஜூன் 2017ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ரோஹித் டிசம்பர் 2025ல் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்.

    உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறை, நீதிபதி ரோஹித்தை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், இதற்கும் அவர் ராஜினாமாவிற்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிகிறது.

    • மும்பை அணியை பொறுத்தவரை அவர்கள் சரியான நேரத்தில் தங்களுடைய பழைய பார்மை மீட்டு இருக்கிறார்கள்.
    • பேட்டிங்கில் கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, திலக் வர்மா ஆகியோர் அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.

    ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது பிளே ஆப்பின் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சிஎஸ்கேவிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. தற்போது மீண்டும் ஒரு முறை அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

    மும்பை - குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த பிட்ச் மெதுவாக இருப்பதால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.

    குஜராத் அணி பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. சேசிங்கில் குஜராத் அணி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்கள். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கடந்த முறை சேசிங் செய்யும் போது குஜராத் அணி கடுமையாக தடுமாறியது. மேலும் சென்னை அணிக்கு எதிரான முதல் குவாலிபயர் ஆட்டத்தில் குஜராத் அணி பேட்டிங்கில் கடுமையாக தடுமாறியது. அந்த அணியில் சுப்மன் கில்லை சுற்றி ஒட்டுமொத்த பொறுப்பும் இருக்கிறது.

    கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் அவர்கள் நான்கில் வெற்றி பெற்று டாப் ஃபார்மில் இருக்கிறார்கள். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்கள், பில்டிங் என அனைத்துமே டாப் க்ளாஸில் இருக்கிறது. இதனால் கோப்பையை வெல்லப்போகும் அணி என்ற அந்தஸ்தையும் மும்பை அணி மீண்டும் பெற்று இருக்கிறது. இதனால் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டம் குஜராத்துக்கு கடும் போட்டியாக இருக்கும்.

    எனினும், குஜராத் அணிக்கு இந்த நாக் அவுட் சுற்றில் ஒரு சாதகமான சூழல் நிலவுகிறது. அதாவது குஜராத் அணி தங்களது சொந்த மண்ணான அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகிறது. இது அவர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

    மும்பை அணியை பொறுத்தவரை அவர்கள் சரியான நேரத்தில் தங்களுடைய பழைய பார்மை மீட்டு இருக்கிறார்கள். ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கடைசி அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. எனினும் அந்த அணி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. மும்பை அணியானது சேப்பாக்கத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்து தகுதி சுற்று-2-ல் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆகாஷ் மத்வால் தனது வேகப்பந்து வீச்சால் மாயாஜாலம் செய்திருந்தார்.

    3.3 ஓவர்களை வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வேட்டையாடி லக்னோ அணியை வேரோடு சாய்க்க பெரிதும் உதவியிருந்தார் மத்வால். நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இல்லாத நிலையில் 29 வயதான மத்வால், மும்பை அணியின் பந்து வீச்சு துறைக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளார்.

    15 ஆட்டங்களில் 21 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள சீனியர் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா, 14 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோரும் உறுதுணையாக செயல்படக்கூடும். கடந்த சில ஆட்டங்களாக அதிக ரன்களை விட்டுக்கொடுத்த கிறிஸ் ஜோர்டான், எலிமினேட்டர் ஆட்டத்தில் 2 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 7 ரன்கள் மட்டும் வழங்கி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

    பார்முக்கு திரும்பி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பந்து வீச்சு வெளிப்படக்கூடும். பேட்டிங்கில் கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, திலக் வர்மா ஆகியோர் அணியின் முதுகெலும்பாக உள்ளனர். இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும்.

    இந்த சீசனில் குஜராத் - மும்பை அணிகள் 3-வது முறையாக சந்திக்கின்றன. கடந்த ஏப்ரல் 25ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது குஜராத் டைட்டன்ஸ். இந்த ஆட்டத்தில் குஜராத் 207 ரன்களை வேட்டையாடி இருந்தது. இந்த தோல்விக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பதிலடிகொடுத்தது. சூர்யகுமார் சதம் விளாசிய அந்த ஆட்டத்தில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

    • சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரெயில் 2 முறை மட்டும் இயங்கும்.
    • காஞ்சீபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நேரடி ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பாபநாசம்:

    தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்கம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தது.

    இந்தநிலையில் மும்பை-தூத்துக்குடிக்கு இடையே தஞ்சை, கும்பகோணம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    கோடைகால நெரிசலை சமாளிக்க சோதனை அடிப்படையில் இந்த சிறப்பு ரெயில் இரண்டு முறை மட்டும் இயங்கும்.

    இந்த சிறப்பு ரெயில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மற்றும் ஜூன் மாதம் 2-ந் தேதியும் மும்பையில் பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு, ரேணிகுண்டா (சனிக்கிழமை) காலை 8.05 மணி, திருத்தணி (9.03 மணி), காஞ்சீபுரம் (10.08 மணி), கும்பகோணம் (மாலை 3.45 மணி), பாபநாசம் (3.59 மணி), தஞ்சை (4.23 மணி), மதுரை (இரவு 7.55 மணி), வழியாக தூத்துக்குடிக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும்.

    தூத்துக்குடியில் வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) மற்றும் ஜூன் மாதம் 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, மதுரை காலை 6.30 மணி, தஞ்சை 9.55 மணி, பாபநாசம் 10.19 மணி, கும்பகோணம் 10.32 மணி, காஞ்சீபுரம் மாலை 3.58 மணி, திருத்தணி 4.58 மணி, ரேணிகுண்டா 6.40 மணி வழியாக மும்பைக்கு 29-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 3.40 மணிக்கு சென்றடையும்.

    பயணிகள் பயன்பாட்டை பொருத்து, இதன் இயக்கம் பின்னர் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இந்த ஒரே ரெயில் இயக்கத்தின் மூலம் தஞ்சை மாவட்ட ரெயில் பயணிகள் நீண்ட நாட்களாக கோரி வந்த மும்பை, திருத்தணி, காஞ்சீபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு நேரடி ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பயணிகள் கோரிக்கையை ஏற்று பல இடங்களுக்கு புதிய நேரடி ரெயில் இணைப்பை ஏற்படுத்தி கொடுத்த ரெயில்வே நிர்வாகத்துக்கு தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம், பாபநாசம் ரெயில் பயணிகள் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் மலிஷா கார்வா.
    • இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ஃபாலேயர்கள் உள்ளனர்.

    மும்பையின் தாராவியை சேர்ந்ச 14 வயது சிறுமி "ஃபார்ஸ்ட் எசென்ஷியல்ஸ்" (Forest Essentials) எனும் அழகுசாதன பிராண்டின் விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி "தி யுவி கலெக்ஷன்" எனும் பெயரில் விளம்பரங்களில் நடிக்க உள்ளார்.

    ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் தான் மலிஷா கார்வா. பின் மலிஷா கார்வா-வை ராபர்ட் ஹாஃப்மேன் தனது வளர்ப்பு மகளாகவும் அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ஃபாலோயர்கள் (Followers) உள்ளனர். தனது இன்ஸ்டா பதிவுகளில் #princessfromtheslum (குடிசை பகுதி இளவரசி) எனும் ஹாஷ்டேக்கை பயன்படுத்துவதை இவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வளர்ந்து வந்த மலிஷா கார்வா ஏராளமான விளம்பரங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் "லிவ் யுவர் ஃபேரிடேல்" எனும் குறும்படத்திலும் நடித்துள்ளார்.

    இந்த நிலையில், மலிஷா கார்வா அழகு சாதன பிராண்டின் விளம்பர முகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவரை விளம்பர தூதராக அறிவிக்கும் பதிவில் ஃபாரஸ்ட் எசன்ஷியல்ஸ், "அவளின் முகம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அவளின் கனவுகள் அவள் கண் முன்னே நிறைவேறியது. மலிஷாவின் வாழ்க்கை, கனவுகள் உண்மையாகும் என்பதற்கு அழகான நினைவூட்டி என்றே கூறலாம் #BecauseYourDreamsMatter," என்று குறிப்பிட்டுள்ளது.

    இத்துடன் மலிஷா கார்வாவின் வீடியோவும் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் மலிஷா கார்வாவுக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

    • இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள்.
    • அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான் கானும் இப்போது ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.

    இந்தி படஉலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டல் தொழிலில் கால் பதித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் சல்மான்கானும் இப்போது மும்பையில் ஓட்டல் கட்ட திட்டமிட்டுள்ளார்.


    சல்மான்கான்

    மும்பையில் கடற்கரையை யொட்டியுள்ள பாந்த்ரா பகுதியில் சல்மான்கானுக்கு வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் கட்டபோவதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அங்கு குடியிருப்புகளுக்கு பதில் பிரமாண்ட ஓட்டல் கட்ட இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

    19 மாடிகளுடன் இந்த ஓட்டல் அமைய இருக்கிறது. இதில் தங்கும் அறைகள், உணவகம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என அனைத்து அம்சங்களும் இடம்பெற உள்ளன. இந்த ஓட்டல் நடிகர் சல்மான்கானின் தாயார் சல்மா பெயரில் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு சல்மான் தரப்பில் மும்பை மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • வழக்கில் தொடர்புடைய அடுக்குமாடி குடியிருப்பு மும்பை தெற்கில் அமைந்துள்ளது.
    • இந்த வீடு அதன் உண்மையான உரிமையாளர் அலைஸ் டிசோசாவுக்கு ஒப்படைக்கப்படவில்லை.

    93 வயதான மூதாட்டி ஒருவர் எட்டு தசாப்தங்களாக நடைபெற்ற சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை தெற்கில் உள்ள அடுக்குமாடி குடியிப்பை 93 வயதான மூதாட்டிக்கு வழங்க மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் கடந்த எட்டு தசாப்தங்களாக நீடித்து வந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    வழக்கில் தொடர்புடைய அடுக்குமாடி குடியிருப்பு மும்பை தெற்கில் அமைந்துள்ளது. ரூபி மேன்சன் என்று அழைக்கப்படும் இந்த குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள இந்த வீடு 500 முதல் 600 சதுர அடி அளவு கொண்டுள்ளது. இதனை மார்ச் 28, 1942 அன்று இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கையகப்படுத்தியது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    பின் ஜூலை 1946 ஆண்டு இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட கையகப்படுத்தும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. எனினும், இந்த வீடு அதன் உண்மையான உரிமையாளர் அலைஸ் டிசோசாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதை எதிர்த்து அலைஸ் டிசோசா வழக்கு தொடர்ந்து இருந்தார். இவரது வீட்டை முன்னாள் அரசு அதிகாரியின் சட்டப்பூர்வ வாரிசுகள் பயன்படுத்தி வந்தனர்.

    கையகப்படுத்தல் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை அமல்படுத்த மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அலைஸ் டிசோசா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை பல்வேறு காரணங்களுக்காக கடந்த 80 ஆண்டுகளாக நீடித்தது. இவரது மனுவுக்கு வீட்டில் குடியிருந்த அப்போதைய அரசு அதிகாரியின் வாரிசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தனர்.

    வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், வீட்டை அலைஸ் டிசோசாவுக்கே ஒதுக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டது. இதன் மூலம் 80 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை
    • கல்லூரிக்கு வருகை குறைவு காரணமாக தேர்வு எழுதவில்லை எனப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மேடவிளாகம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், கல்லூரியில் முதுகலை பயின்று வந்தார்.

    அவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை உறவினருடன், பொழியூர் கடற்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் உறவினரின் பார்வையில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்.

    மாணவியின் கைப்பை மற்றும் காலணிகள் கடற்கரையிலேயே கிடந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் பொழியூர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் வீட்டில் சோதனை செய்த போது, தற்கொலை செய்து கொள்ள மாணவி முடி வெடுத்ததாக எழுதப்பட்ட கடிதம் கிடைத்தது.

    இதனால் மாணவி தற்கொலை செய்திருக்க லாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மரைன் போலீ சாரும் கடற்கரை பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். இதற்கிடையில் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ேபாலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது, சந்தேகம் அளிக்கும் வகையில் பர்தா அணிந்த ஒருவர் ஆட்டோ வில் ஏறிச் செல்வது தெரிய வந்தது. அது மாணவி யாக இருக்கலாமா? என்ற சந்தே கத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆட்டோ டிரை வரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறியவர், களியக்காவிளையில் உள்ள ஒரு பேக்கரியில் 'கூகுள் பே' செய்து பணம் பெற்றார் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 'கூகுள் பே' பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து, போலீசார் விசாரணை தொடங்கினர்.

    இதில் தற்போது அந்த செல்போன் சிக்னல் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் மாணவி மும்பையில் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்ற னர். இதனை தொடர்ந்து பொழியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிகுமார் தலைமையில் போலீசார் மும்பை சென்றுள்ளனர்.

    மாணவி மும்பை சென்றது ஏன்? அவர் தானாக சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது மாணவி, கல்லூரிக்கு வருகை குறைவு காரணமாக தேர்வு எழுத வில்லை என்பதும் அதனால் அவர் ஊரை விட்டு சென்றிருக்க லாம் என்ற தகவலும் கிடைத்து உள்ளது.

    இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். மும்பை சென்ற போலீசார், மாணவியுடன் திரும்பினால் தான், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    ×