கனவு நிறைவேறியது.. அழகு சாதன பிராண்டின் விளம்பர முகம் - வைரலாகும் தாராவி சிறுமி!

ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் மலிஷா கார்வா.இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ஃபாலேயர்கள் உள்ளனர்.
கனவு நிறைவேறியது.. அழகு சாதன பிராண்டின் விளம்பர முகம் - வைரலாகும் தாராவி சிறுமி!
Published on

மும்பையின் தாராவியை சேர்ந்ச 14 வயது சிறுமி "ஃபார்ஸ்ட் எசென்ஷியல்ஸ்" (Forest Essentials) எனும் அழகுசாதன பிராண்டின் விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி "தி யுவி கலெக்ஷன்" எனும் பெயரில் விளம்பரங்களில் நடிக்க உள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாஃப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் தான் மலிஷா கார்வா. பின் மலிஷா கார்வா-வை ராபர்ட் ஹாஃப்மேன் தனது வளர்ப்பு மகளாகவும் அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ஃபாலோயர்கள் (Followers) உள்ளனர். தனது இன்ஸ்டா பதிவுகளில் #princessfromtheslum (குடிசை பகுதி இளவரசி) எனும் ஹாஷ்டேக்கை பயன்படுத்துவதை இவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வளர்ந்து வந்த மலிஷா கார்வா ஏராளமான விளம்பரங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் "லிவ் யுவர் ஃபேரிடேல்" எனும் குறும்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மலிஷா கார்வா அழகு சாதன பிராண்டின் விளம்பர முகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவரை விளம்பர தூதராக அறிவிக்கும் பதிவில் ஃபாரஸ்ட் எசன்ஷியல்ஸ், "அவளின் முகம் முழுக்க மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அவளின் கனவுகள் அவள் கண் முன்னே நிறைவேறியது. மலிஷாவின் வாழ்க்கை, கனவுகள் உண்மையாகும் என்பதற்கு அழகான நினைவூட்டி என்றே கூறலாம் #BecauseYourDreamsMatter," என்று குறிப்பிட்டுள்ளது.

இத்துடன் மலிஷா கார்வாவின் வீடியோவும் இணைக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் மலிஷா கார்வாவுக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com