search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "legal battle"

    • சட்ட போராட்டம் மேலும் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
    • சிவில் கோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க சாத்தியமில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கு சென்ற பிறகு அதை கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை.

    கடைசியாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க ஐேகார்ட்டு மறுத்துவிட்டது.

    இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து இருந்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

    இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறார்கள்.

    இதற்கிடையில் சட்ட போராட்டம் மேலும் தொடரும் என்று ஓ.பன்னீர்செல் வத்தின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    சிவில் கோர்ட்டில் மட்டும் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கையும் விரைந்து விசாரித்து முடிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    எந்த பிடிமானமும் இல்லாத நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த கட்ட அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்று அரசியல் தளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

    இதுபற்றி அரசியல் விமர்சகரான தராசு ஷ்யாம் கூறியதாவது:-

    இனியும் ஒ.பன்னீர்செல்வத்தின் சட்டப் போராட்டம் என்பது நிறைவேறாத கனவை போன்றது.

    விசாரணை நீதிமன்றம் கட்சியின் நிலைமையையும் பார்க்கும். அதை பார்க்கும் போது பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி இருப்பது மறுக்க முடியாத உண்மை. எனவே சிவில் கோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க சாத்தியமில்லை.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனிச் சின்னமாக பரிசு பெட்டி சின்னத்தை கேட்டு பெற்றார். அதே போல் ஓ.பன்னீர்செல்வமும் தன் தரப்பு வேட்பாளர்களுக்கு தனி சின்னங்களை தேடுவதே சிறப்பாக இருக்கும்.

    அவரது ஆதரவாளர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றார்.

    • வழக்கில் தொடர்புடைய அடுக்குமாடி குடியிருப்பு மும்பை தெற்கில் அமைந்துள்ளது.
    • இந்த வீடு அதன் உண்மையான உரிமையாளர் அலைஸ் டிசோசாவுக்கு ஒப்படைக்கப்படவில்லை.

    93 வயதான மூதாட்டி ஒருவர் எட்டு தசாப்தங்களாக நடைபெற்ற சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை தெற்கில் உள்ள அடுக்குமாடி குடியிப்பை 93 வயதான மூதாட்டிக்கு வழங்க மகாராஷ்டிரா அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் கடந்த எட்டு தசாப்தங்களாக நீடித்து வந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    வழக்கில் தொடர்புடைய அடுக்குமாடி குடியிருப்பு மும்பை தெற்கில் அமைந்துள்ளது. ரூபி மேன்சன் என்று அழைக்கப்படும் இந்த குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள இந்த வீடு 500 முதல் 600 சதுர அடி அளவு கொண்டுள்ளது. இதனை மார்ச் 28, 1942 அன்று இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கையகப்படுத்தியது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    பின் ஜூலை 1946 ஆண்டு இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட கையகப்படுத்தும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. எனினும், இந்த வீடு அதன் உண்மையான உரிமையாளர் அலைஸ் டிசோசாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதை எதிர்த்து அலைஸ் டிசோசா வழக்கு தொடர்ந்து இருந்தார். இவரது வீட்டை முன்னாள் அரசு அதிகாரியின் சட்டப்பூர்வ வாரிசுகள் பயன்படுத்தி வந்தனர்.

    கையகப்படுத்தல் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை அமல்படுத்த மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அலைஸ் டிசோசா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை பல்வேறு காரணங்களுக்காக கடந்த 80 ஆண்டுகளாக நீடித்தது. இவரது மனுவுக்கு வீட்டில் குடியிருந்த அப்போதைய அரசு அதிகாரியின் வாரிசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தனர்.

    வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், வீட்டை அலைஸ் டிசோசாவுக்கே ஒதுக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டது. இதன் மூலம் 80 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

    டெல்லியின் கொடுமைப்படுத்திய மகன் மருமகளுக்கு எதிராக பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில் மகன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியைச் சேர்ந்த 78 வயது முதியவர் தனது 74 வயது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். அவரது மகன், மருமகள் இருவரும் பெற்றொரை கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களை துன்புறுத்தி கொல்ல முயற்சி செய்தனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மகன் மருமகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். மகன் மற்றும் மருமகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், அவர்களை அமைதியாக வாழ விட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.  #tamilnews

    ×