search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apartment building"

    • ஷார்க் சர்க்யூட் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
    • தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாக கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர்.

    மும்பை அருகே தானே டோம்பிவலியில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கட்டிடங்கள் முழுவதும் தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாகவே கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர். பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், தீயை அணைக்கும் முயற்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லோதா குடியிருப்பு வளாகத்தில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து ஷார்ச் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் 11 வது தளத்தில் ஏற்பட்ட தீ, 18 வது மாடி வரை பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

    • சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
    • சுமார் 80,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் சென்னை, நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் சென்னை, ஆலந்தூர் வட்டம், நந்தம்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கும், அங்கு முதற்கட்டமாக 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.

    இந்நகரம் அமைவதன் மூலம் 12,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், சுமார் 80,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும்.

    நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள அலுவலகங்கள் இங்கு அமைக்கப்படும். இதில் 250 இருக்கைகள் மற்றும் 50 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கங்கள், குழந்தைகள் காப்பகம், உடற்பயிற்சி கூடம், உணவகங்கள் போன்றவை அமைக்கப்படும். இந்த நிதிநுட்ப கோபுரம் அமைவதன் மூலம், 1000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படு வதுடன் சுமார் 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும்.

    • 5 ஆண்டுகள் பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம்-குனியமுத்துார் இடையே சுகுணாபுரம் அருகே, குறிச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது அரசு அடுக்குமாடி குடியிருப்பு.

    மலையின் உச்சியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பார்ப்பதற்கு பிரம்மாணடமாக காட்சியளிக்கிறது. சுமார் 3.45 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.15 கோடி மதிப்பில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டது.

    புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்காக தமிழக அரசு கட்டிய இந்த குடியிருப்பில் மொத்தம் 224 வீடுகள் உள்ளன. மொத்தம் 14 பிளாக்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வீடும் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல்அறை, பால்கனி, கழிப்பிடம் என 400 சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் மின் இணைப்பும் இந்த குடியிருப்புக்கு வழங்கப்பட்டுவிட்டது.

    ஆனால், இந்த குடியிருப்பில் தற்போது வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை. இந்த 224 வீடுகளும் திருநங்கைகளுக்கும், நலிந்த மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இங்கு பாதுகாப்பு குறைபாடுகள் அதிகமாக இருப்பதால் இதுவரை யாரும் இங்கு குடியேறாமல் உள்ளனர்.

    5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாடில்லாமல் இருக்கும் இந்த குடியிருப்பில் மர்ம நபர்கள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 224 குடியிருப்புகளிலும் மது பாட்டிகள், சுவர்களில் அருவருக்கத்தக்க படங்கள் வரையப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் இங்கு விபசாரமும் நடைபெறுவதாக சுற்றுவட்டார பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு வயர்கள், தண்ணீர் குழாய்கள், இரும்பு ஜன்னல்கள் என அனைத்தும் சூறையாடபட்டுள்ளது.

    புதர் மண்டி கிடக்கும் இந்த குடியிருப்பை புனரமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    ×