search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது சிராஜ்"

    • சிராஜின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது.
    • முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார்.

    இலங்கையின் பேட்டிங் முதுகெலும்பை சுக்குநூறாக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 7 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.

    மேலும் சில சாதனை விவரம் வருமாறு:-

    * முகமது சிராஜியின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் வாக்கர் யூனிஸ் 1990-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இலங்ைகக்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

    * அற்புதமாக பந்து வீசிய இந்திய பவுலர்களில் ஸ்டூவர்ட் பின்னி (4 ரன்னுக்கு 6 விக்கெட், வங்காளதேசம் எதிராக), அனில் கும்பிளே (12-6, வெஸ்ட் இண்டீஸ் எதிராக), பும்ரா (19-6, இங்கிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு அடுத்த இடத்தை முகமது சிராஜின் பந்து வீச்சு பிடித்துள்ளது.

    * முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார். பந்து வாரியாக சாதனை விவரம் கணக்கிடப்பட்ட 2002-ம் ஆண்டில் இருந்து ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை அறுவடை செய்த 4-வது பவுலராக முகமது சிராஜ் திகழ்கிறார். ஏற்கனவே இலங்கையின் சமிந்தா வாஸ் (2003-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக), பாகிஸ்தானின் முகமத் சமி (2003-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக), இங்கிலாந்தின் அடில் ரஷித் (2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஆகியோர் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள்.

    * 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். அதன் பிறகு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட் எடுத்த வீரர் சிராஜ் தான்.

    * இலங்கையின் 50 ரன், ஒரு நாள் போட்டி இறுதிப்போட்டிகளில் ஒரு அணியின் மோசமான ஸ்கோராக அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான இறுதிசுற்றில் இந்தியா 54 ரன்னில் ஆல்-அவுட் ஆகி இருந்ததே இந்த வகையில் சொதப்பல் ஸ்கோராக இருந்தது.

    * இந்தியாவுக்கு எதிராக ஒரு அணியின் குறைந்த ஸ்கோரும் இது தான். 2014-ம் ஆண்டு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் 58 ரன்னில் அடங்கியதே முந்தைய தாழ்ந்த ஸ்கோராகும்.

    • 6 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    • அதற்கான பரிசுத்தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கினார்.

    கொழும்பு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா இலங்கை அணிகள் மோதின.

    முதலில் ஆடிய இலங்கை அணி 50 ரன்னில் சுருண்டது. முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட் உள்பட 6 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.

    இறுதியில், இந்தியா 8-வது முறையாக ஆசிய கோப்பை வென்று சாம்பியன் ஆனது.

    இந்நிலையில், 6 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. பரிசு பெற்ற சிராஜ், அந்தத் தொகையை கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

    இதுதொடர்பாக, சிராஜ் கூறுகையில், இந்த ரொக்கப் பரிசை மைதான வீரர்களுக்கு வழங்க விரும்புகிறேன். அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் என தெரிவித்தார்.

    முகமது சிராஜின் இந்த செயலுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
    • சிராஜ் கடைசியாக மார்ச் 2022-ல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

    பிரிட்ஜ்டவுன்:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது.

    அதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்திய அணி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கான பிஸியான அட்டவணையைக் கருத்தில் கொண்டு சிராஜ்க்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    சிராஜ் கடைசியாக மார்ச் 2022-ல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். 

    • நான் முன்பு புவனேஷ்வர் குமார் சார்பில் பர்ப்பிள் கேப் வாங்கினேன்.
    • அப்போது நானும் ஒருநாள் அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் வெல்ல வேண்டும் என கனவு கொண்டேன்.

    மொகாலி:

    29 வயதான சிராஜ் கடந்த 2017 முதல் ஐபிஎல் அரங்கில் விளையாடி வருகிறார். முதல் சீசனை ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2018 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 71 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.

    இந்நிலையில் நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்பதற்கான அங்கீகாரமாக பர்பிள் கேப்பை அவர் பெற்றுள்ளார்.

    இது குறித்து சிராஜ் கூறியதாவது:-

    கடந்த ஐபிஎல் சீசன் நான் எதிர்பார்த்த அளவுக்கு எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. நான் செயல்படுத்த விரும்பியதை என்னால் செய்ய முடியாமல் போனது. இப்போது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறேன்.

    மூன்று பார்மெட்டிலும் விளையாட விரும்புகிறேன். ஆனால், அது என் கைகளில் இல்லை. எனது எண்ணம் எல்லாம் சிறப்பாக செயல்படுவதில் மட்டுமே உள்ளது. அதை செய்கிறேன். பவுலிங்கில் எனது ரிதமில் கவனம் செலுத்தி வருகிறேன்.

    நான் முன்பு புவனேஷ்வர் குமார் சார்பில் பர்ப்பிள் கேப் வாங்கினேன். அப்போது நானும் ஒருநாள் அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் வெல்ல வேண்டும் என கனவு கொண்டேன். அது இப்போது நடந்துள்ளது மகிழ்ச்சி.

    என சிராஜ் கூறினார்.

    • ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் முகமது சிராஜ்.
    • சிராஜ் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார்.

    மும்பை:

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களான எஸ்.ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தடை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு மே மாதம் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்ததற்காக முன்னாள் சிஎஸ்கே அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதில் இருந்து பிசிசிஐ அதன் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த நபர் ஒருவர், அணியின் உள் தகவல்களை பெற தன்னை நாடியதாக பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவில் (ஏசியூ) இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் புகார் அளித்துள்ளார்.

    கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஒருநாள் போட்டியின்போது, முகமது சிராஜை ஒரு நபர் அணுகியதாகவும், சிராஜ் உடனடியாக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு இந்த விஷயத்தைத் தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்தவர் முகமது சிராஜ். மேலும், சிராஜ் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் 6 இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
    • கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ரோகித் 9 இடத்துக்கு முன்னேறினார்.

    துபாய்:

    நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியை இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. இதன் மூலம் அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த தொடர முடிவடைந்த பின்னர் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.


    இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 2 இடம் உயர்ந்து 6 இடத்துக்கு முன்னேறி உள்ளார். விராட் கோலி ஒரு இடம் இறங்கி 7 வது இடத்துக்கு வந்துள்ளார். கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ரோகித் 9 இடத்துக்கு முன்னேறினார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் முகமது சிராஜ் முத்ல் இடத்துக்கு முன்னேறினார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை . ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதல் இடத்திலு, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் வான் டெர் டுசென், டிகாக் 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.

    • அபாரமாக ஆடிய விராட் கோலி 166 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
    • வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஓவரை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி 166 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஷூப்மன் கில் 116 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஓவரை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். முன்னணி பேட்ஸ்மேன்கள் அவிஷ்கா பெர்னாண்டோ (1), குசால் மெண்டிஸ் (4), நுவனிது பெர்னாண்டோ (19) ஆகியோர் சிராஜ் ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.

    டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சனகா(11) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 50 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது. 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 73 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 317 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா ஏற்கனவே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது.

    • வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 6 விக்கெட்கள் கைவசம் உள்ளன.
    • இந்திய வீரர்களில் ஒரு ஜோடி நிலைத்து நின்று ஆடினால் வெற்றி பெற முடியும்.

    டாக்கா:

    இந்தியா வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. டாக்காவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் ஆடிய வங்காளதேசம், முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்தது.

    தொடந்து 2-வது இன்னிங்சை விளையாடிய வங்காளதேசம் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தள்ளது.

    அக்சர் பட்டேல் 26 ரன்னுடனும், உனத்கட் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணியிடம் இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் உள்ளது.

    இந்திய அணியின் வெற்றிக்கு 100 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இன்று வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெறுமா? அல்லது இந்திய அணியின் எஞ்சிய விக்கெட்டுகளையும் கைப்பற்றி வங்காளதேசம் வெற்றி பெறுமா என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்றைய போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளதாவது: நான்கு விக்கெட்டுகளை விரைவாக இழந்த போதும் பேட்டிங் செய்ய இன்னும் சிலர் இருக்கிறார்கள். அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

    அக்சர் ஏற்கனவே செட் ஆகி உள்ளார். அவர் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்துகிறார். ரிஷப் (பண்ட்) மற்றும் ஐயர் (ஷ்ரேயாஸ் ) இன்னும் இருக்கிறார்கள். நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இவர்களில் யாராவது ஒரு ஜோடி நிலைத்து நின்று ஆடினால் நாம் வெற்றி பெற முடியும். மேலும் இடது மற்றும் வலது கை பேட்டிங் கலவை வங்காளதேச பந்து வீச்சாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு தெரிவித்தார்.

    • நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.
    • பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் துவங்குகிறது. இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் நம்பர் ஒன் டி20 அணியான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உள்பட 16 அணிகள் களமிறங்குகின்றன.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தீபர் சாஹர் அல்லது முகமது சமி இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தீபக் சாஹர் காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் முகமது சமி ஆடும் லெவனில் இடம் பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பும்ராவுக்கு பதிலாக சமியை தேர்வு செய்வதற்கு மாற்றாக சிராஜை தேர்வு செய்யலாம் என்று சுனில் கவாஸ்கர் காரணத்துடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் பும்ராவுக்கு பதிலாக சிராஜை தேர்வு செய்வேன். ஏனெனில் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார். சமி நீண்ட காலமாக விளையாடாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட அவர் ஒருசில பயிற்சி போட்டிகளில் மட்டும் விளையாடி விட்டு நேரடியாக உலக கோப்பையில் விளையாடுவது நிச்சயம் சரியான வழியல்ல.

    இருப்பினும் தற்சமயத்தில் 15ஆவது வீரராக யாரும் தேர்வு செய்யப்படாத நிலையில் சமி ஆஸ்திரேலியாவுக்கு செல்வாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் அவர் எந்த டி20 கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை என்பதே பிரச்சனையாகும்.

    அவரிடம் தரமும் திறமையும் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து திடீரென்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்ததும் கம்பேக் கொடுப்பது கடினமாகும்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

    ×