search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்ச்"

    • அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 படத்தில் நடித்து வருகிறார்.
    • கன்னட நடிகையான ருக்மணி வசந்த் இப்படத்தின் கதாநாயகி.

    சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் வெற்றியை அடுத்து பல முன்னணி இயக்குநர்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். அமரன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய அமரன் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

    அமரன் படத்தில் ஒரு ஆர்மி கமேண்டோவாக நடித்துள்ளார். இதற்காக அவர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டு மஸ்த்தாக வைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

    அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 படத்தில் நடித்து வருகிறார்.இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவடைந்த நிலையில்.


     


    இன்று பாண்டிசேரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது. கன்னட நடிகையான ருக்மணி வசந்த் இப்படத்தின் கதாநாயகி. சமீபத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்து வெளியாகிய 'சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தில் இவர் நடித்தார். இதனிடையே, SK23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


     


    • நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர்
    • இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த ’பிங்க்’படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    நடிகர் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை இயக்கியதில் ஹெச்.வினோத் ஒருவர். வினோத் 2014 ல் வெளியான சதுரங்க வேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். சதுரங்க வேட்டை திரைப்படம் மக்களால் கொண்டாடப்பட்டது. 2014-ல் வெளியான திரைப்படங்களில் 'சதுரங்க வேட்டை' ஒரு புது விதமான கதை பாணியுடன் வெளிவந்தது. சூதாட்டம், மக்களை எப்படி நூதன முறையில் ஏமாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.

    இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. பின் 2017-ல் கார்த்தியை வைத்து 'தீரன் அதிகாரம் ஒன்று'படத்தை இயக்கினார். கார்த்தியின் திரையுலக பயணத்தில் பேர் சொல்லும் படமாக இது அமைந்தது. கார்த்தி ஒரு போலீஸ் அதிகாரியாக திறம்பட நடித்திருப்பார்.

    இந்தியில் அமிதா பச்சன் நடிப்பில் வெளிவந்த 'பிங்க்'படத்தை தமிழில் நடிகர் அஜித்தை வைத்து இயக்கினார் வினோத்.

    2022-ஆம் ஆண்டு அஜித்-தை வைத்து வலிமை படத்தை இயக்கினார். 2023-ல் மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கினார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் போன்ற பலர் நடித்திருந்தனர். போனி கபூர் இப்படத்தை தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்தார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் அள்ளியது. அஜித் ரசிகர்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் வினோத் அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் பங்குபெற்ற நேர்காணலில் "என்னோட முதல் படத்த தவிர நான் யாரிடமும் முழு கதையை சொன்னது கிடையாது, விஜய் சாருக்கு கதை சொல்லும்போது மட்டும்தான் முழு கதைய படிச்சு காட்டினேன்"என்று அவர் கூறியுள்ளார். இதை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    மலையாள சினிமாவில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்லஸி இப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ப்ரிதிவிராஜ் சுகுமாரன் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    'தி கோட்ஸ் லைஃப்'என இப்படத்திற்கு ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ப்ரித்திவிராஜ் 'நஜீப்' எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    சுனில் கே. எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் ப்ரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் இப்பொழுது வெளியாகியுள்ளது.

    • நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார்.
    • படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் D-51-வது படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது.

    இப்படத்தில் தனுஷ்,நாகார்ஜூனா,ராஷ்மிகா மந்தனா,சவுரவ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. படத்திற்கு "குபேரா" என்று பெயரிடப்பட்டுள்ளனர்.

    தனுஷ் இதில் சிவன் பார்வதி படத்தின் முன் நின்றிப்பது போல் போஸ்டர் வடிவமைத்து இருக்கின்றனர். இந்த படத்தில் தனுஷ் என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • மேயர் மகேஷ் தகவல்
    • மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வைத்து திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மகேஷ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடம் ரூ.10கோடியே 50 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. அலுவலக பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்பொழுது காம்பவுண்டு கட்டுமான பணி நடந்து வருகிறது.

    மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வைத்து திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தின் முன்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கட்சி அலுவலகமும் புதுப்பிக்கப்பட உள்ளது. கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் மாநகராட்சி அலுவலகம் திறப்பு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து அழைத்தோம். பிப்ரவரி மாதத்தில் வருவதாக கூறியிருந்தார். தற்பொழுது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் மார்ச் முதல் வாரத்தில் வருவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வருகிற 30-ந்தேதி நேரில் சந்தித்து மாநகராட்சி அலுவலக கட்டிடத்திற்கான புக்லேட் மற்றும் கலைஞர் சிலை அமைப்பதற்கான புக் லைட்டை வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×