புதுச்சேரியில் SK23 இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 படத்தில் நடித்து வருகிறார்.கன்னட நடிகையான ருக்மணி வசந்த் இப்படத்தின் கதாநாயகி.
புதுச்சேரியில் SK23 இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்
Published on

சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் வெற்றியை அடுத்து பல முன்னணி இயக்குநர்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். அமரன் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய அமரன் படத்தின் ட்ரெயிலர் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

அமரன் படத்தில் ஒரு ஆர்மி கமேண்டோவாக நடித்துள்ளார். இதற்காக அவர் உடற்பயிற்சி செய்து உடலை கட்டு மஸ்த்தாக வைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

அமரன் படத்திற்கு அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் SK23 படத்தில் நடித்து வருகிறார்.இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் நிறைவடைந்த நிலையில்.

இன்று பாண்டிசேரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பமானது. கன்னட நடிகையான ருக்மணி வசந்த் இப்படத்தின் கதாநாயகி. சமீபத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்து வெளியாகிய 'சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தில் இவர் நடித்தார். இதனிடையே, SK23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com