search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் குண்டு"

    • முதலியார் பேட்டை போலீசில் சஞ்சய்குமார் அளித்த புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தேங்காய்திட்டு செல்வா நகர் பகுதியைசேர்ந்த சஞ்சய்குமார் (வயது23). பழ வியாபாரி. இவரது தம்பிக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி (21) மற்றும் வெங்கடேசன் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு இருதரப்பினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதனை சஞ்சய்குமார் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த மணி, வெங்கடேசன் ஆகியோர் சாலையில் கிடந்த ஒரு மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அதில் திரியை கொளுத்தி சஞ்சய்குமார் வீட்டில் தூக்கி எறிந்தனர்.

    இதில் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசில் சஞ்சய்குமார் அளித்த புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணி, வெங்கடேசன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது.
    • ஓட்டலில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் ஆர்ச் அருகில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் அவனியாபுரம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    ஓட்டலில் தகராறு

    கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கீரைத்துறை பகுதி யைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் ரத்தின குமார் (வயது 23) என்பவர் சாப்பிட வந்தார். சாப்பிட்ட பின்னர் அதற்கு பணம் தராமல் ஓட்டலில் வேலை பார்த்து வரும் ஊழியர்க ளுடன் தகராறில் ஈடுபட் டுள்ளார்.

    இதையடுத்து அந்த ஓட்டல் உரிமையாளர் ஜனார்த்தனன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தி னகுமாரை கைது செய்தனர்.

    பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட ரத்தின குமார் ஜாமினில் வெளிய வந்தார். தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த, தன்மீது புகார் கொடுத்த வரை பழிவாங்க திட்டம் தீட்டினார். இதையடுத்து கடந்த 10-ந்தேதி (ஞாயிற் றுக்கிழமை) இரவு ஓட்டல் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ஓட்டலில் இருந்த ஒரு சில பொருட்கள் சேதம் அடைந்தன.

    இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவனியாபுரம் இன்ஸ்பெக் டர் பார்த்திபன் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சி பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தினார். அதில் பதிவான காட்சிகள் அடிப்படையில் ஓட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரத்தினகுமாரை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவருடன் வந்த மற்றொரு நபருக்கு போலீ சார் வலைவீசி தேடி வரு கின்றனர். பெட்ரோல் குண்டு வீசிய ரத்தினகுமார் மீது கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தூசி அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு
    • போலீசார் விசாரணை

    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள குண்டியாந் தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் மற்றும் உத்திரமே ரூரை அடுத்த கருவேப்பம் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன் இருவரும் நேற்று முன்தினம் இரவு 8 மணியள வில் மது குடித்ததாக கூறப்படுகிறது.

    பின் னர் அவர்கள் போதையில் நாங்களும் ரவுடிதான் என பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.

    இதனை அந்த பகுதியில் இருந்த ஏகாம்பரம் மகன் சபேஸ் தட்டிக்கேட்டார். ஆத் திரம் அடைந்த கார்த்திக், அர விந்தன் ஆகியோர் ஆபாச மாக பேசி கையில் வைத்தி ருந்த பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து பொதுமக்கள் மீது வீசினார் கள்.

    இதைப்பார்த்து சுதாரித்துக் கொண்டு ஒதுங்கவே தீயில் இருந்து தப்பினர். உடனே கிராம மக்கள் 2 வாலி பர்களையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது இருவரும் பைக்கில் தப்பி சென்றனர்.

    இது குறித்து சபேஸ் நேற்று தூசி போலீசில் புகார் செய் தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து கிராமத்தில் ரவுடி தனம் செய்து பெட்ரோல் குண்டு வீசிய கார்த்திக், அர விந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • 16 வயதுடைய சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • காசர்கோடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 25). இவர் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17, 19 வயதுடைய சிறுவர்களுடன் சேர்ந்து ஒரு பழைய கட்டிட சுவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்த்து அந்த காட்சிகளை பதிவாக்கி சமூகவலை தளமான இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டனர். அதன் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க 3 பேரும் நடனம் ஆடிய காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.

    இதுகுறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தியதில், 3 பேரும் யூ-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டுகளை தயாரித்ததாகவும், தயாரித்த குண்டுகளை ஒரு கட்டிடத்தின் சுவர் மீது வீசி ஒத்திகை பார்த்ததும் தெரிய வந்தது. மேலும், இதில் 16 வயதுடைய சிறுவனுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இசக்கியப்பன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து, தலைமறைவான 16 வயது சிறுவனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில் அவன் கேரளாவிற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அங்கு விரைந்து சென்றது. அங்கு காசர்கோடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    • வானுமாமலையின் இட்லி கடைக்கும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது.
    • வானுமாமலையின் மாமனாரான ராமையா வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டை வீசியது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் வானுமாமலை(வயது 27). இவர் அப்பகுதியில் இட்லி கடை வைத்துள்ளார்.

    இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கபாலி கண்ணன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று இரவு கபாலி கண்ணனின் மகன் நவீன், அவரது நண்பர்கள் சுடலைக்கண்ணு, முருகேசன், ராஜா மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உள்பட 9 பேர் கையில் அரிவாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வானுமாமலை வீட்டுக்கு சென்றுள்ளனர்.

    அங்கு பேசிக்கொண்டிருந்த வானுமாமலையின் தம்பி செல்வம், மைத்துனர் சுடலைமுத்து ஆகியோர் கும்பலை கண்டதும் தப்பி ஓடி விட்டனர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வானுமாமலையின் தாயார் ஆறுமுகம், சித்தி விஜயா ஆகியோரை அரிவாளை காட்டி மிரட்டி அவதூறாக பேசினர். இதைப்பார்த்த வானுமாமலையின் மனைவி முத்துலெட்சுமி வீட்டின் படுக்கை அறைக்குள் புகுந்து கதவை பூட்டிக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து நவீன் உள்ளிட்ட 9 பேரும் வீட்டுக்குள் பெட்ரோல் வெடிகுண்டை வீசினர். இதனால் வீட்டில் இருந்த சோபா, டேபிள் உள்ளிட்ட பொருட்கள் தீ பற்றி எரிந்தன. வீட்டு கதவு, ஜன்னல்களையும் அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் உடைத்தனர். டேபிளில் இருந்த ரூ.84 ஆயிரத்தையும் அந்த கும்பல் திருடிச்சென்றதாக கூறப்படு கிறது.

    அத்துடன் வானுமாமலையின் இட்லி கடைக்கும் அந்த கும்பல் தீ வைத்து விட்டு தப்பி சென்றது. தொடர்ந்து வானுமாமலையின் மாமனாரான ராமையா வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டை வீசியது. இதில் அந்த வீடுகளின் முன்புள்ள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின.

    இதுபற்றி வானுமாமலை நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நவீன் உள்பட 9 பேர் மீது வெடிகுண்டு தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

    MDU03280723: சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சப்பாணி. இவருக்கும் மருமகள் தேவிக் கும் எற்கனவே இடப்பிரச் சினை இருந்து வந்தது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் அடிக்கடி மோதலிலும், கைகலப்பிலும் ஈடுபட்டு வந்தனர். அவ்வப்போது ஏற்படும் தகராறை அவர்களது உ

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சப்பாணி. இவருக்கும் மருமகள் தேவிக்கும் எற்கனவே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் அடிக்கடி மோதலிலும், கைகலப்பிலும் ஈடுபட்டு வந்தனர்.

    அவ்வப்போது ஏற்படும் தகராறை அவர்களது உறவினர்கள் சமரசம் பேசி தீர்த்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் இருதரப்பினரும் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து அதுதொடர்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று இரவு மீண்டும் மாமியார், மருமகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு முற்றியது. அப்போது ஏற்பட்ட சண்டையை வழக்கம்போல் உறவினர்கள் விலக்கிவிட வந்தனர். இதில் மதுரை அருகே இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இடப்பிரச்சினையில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக மதுரை சிந்தாமணி ரிங்ரோடு அருகேயுள்ள மகாமுனி என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் நள்ளிரவில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் கிடந்த பொருட்கள் மட்டும் சேதமடைந்தன.

    இதேபோல் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டிலும், அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு டீக்கடையிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை சிலைமான் மற்றும் சிவகங்கை திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த மாதவன் மற்றும் பிரசன்னா என்பது தெரியவந்தது. இருவரும் பெட்ரோல் குண்டுகளை தயாரித்து நள்ளிரவில் வந்து வீசியது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

    இடப்பிரச்சினை மற்றும் டீக்கடையில் ஓசிக்கு சிகரெட் கேட்டு அதனால் ஏற்பட்ட தகராறிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டு வீசி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜபாளையம் அருகே பெட்டிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • என்ன காரணத்திற்காக வீசிச்சென்றனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் முடங்கியார்ரோடு, பி.எஸ்.கே.மாலையாபுரம் பகுதியை சேர்ந்தவர் நீராசிலிங்கம் (வயது40). தனது வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    நேற்று இரவு பெட்டிக்கடையை பூட்டி விட்டு தூங்கச்சென்றார். நள்ளிரவில் வெடி சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தார். அப்போது பெட்டிக்கடை முன்புறம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியு டன் தீயை அணைத்தார்.

    பின்னர் அங்கு பார்த்த போது பாட்டிலில் திரி பொருத்தப்பட்டு கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து பெட்டிக்கடை மீது வீசி விட்டுச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நீராசிலிங்கம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? என்ன காரணத்திற்காக வீசிச்சென்றனர்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குளத்தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 26). இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில மாணவரணி இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 1:30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதில் வீட்டு கதவில் இருந்த திரைச்சீலை மட்டும் எரிந்தது.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஸ்ரீகாந்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே வெளியே வந்து பார்த்து தீ பிடித்து எரிந்த திரைச்சீலை அணைத்தார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    பின்னர் இது குறித்து ஸ்ரீகாந்த் பட்டுக்கோட்டை நகர போலீசுக்கு தகவல் அளித்தார். அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் தெரியவில்லை. ஸ்ரீகாந்திற்கு வேறு யாருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததா? அல்லது வேறு காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்யநாராயணனின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் அவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசினர்.
    • பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் சத்யநாராயணன்.பா.ம.க. வடசென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மகன் நிஷால். தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று இரவு நிஷால் காசிமேடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென நிஷாலை வழிமறித்து கத்தி, அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷால் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பினார். இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து நிஷால் தனது தந்தை சத்யநாராயணனிடம் தெரிவித்தார். அவர் மர்ம கும்பல் குறித்து காசிமேடு போலீசில் புகார் அளித்தார்.

    அந்த நேரத்தில் சத்யநாராயணனின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் அவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் பெட்ரோல் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பெட்ரோல் குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக சத்யநாராயணனின் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி அறிந்ததும் காசிமேடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சத்யநாராயணனின் வீட்டு முன்பு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று அப்பகுதியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக நிஷாலுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

    இது பற்றி சத்யநாராயணன் போலீசில் புகார் அளித்து பின்னர் சமாதானம் செய்து முடித்து உள்ளனர். இந்த தகராறில் கொலை முயற்சி மற்றும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இதே கும்பல் ராயபுரம் மஸ்தான் கோவில் தெருவில் வந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நவீன், தினேஷ் ஆகியோரிடமும் மோதலில் ஈடுபட்டு அவரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    • கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பனும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

    கடலூர் அருகே திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் அருகே நல்லூத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பனும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

    பெட்ரோல் குண்டு வீசியது யார் என்பது தொடர்பான விவரங்களை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.

    • வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.
    • வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது48). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் கொப்புசித்தம்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவராக உள்ளார்.

    விஜயலட்சுமி பந்தல்குடியில் வசித்து வருவதால் கொப்புசித்தம்பட்டியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் உறவினர் பஞ்சவர்ணம் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பஞ்சவர்ணம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் 3 காலி மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து வீட்டின் மீது சரமாரியாக வீசிவிட்டு தப்பினார். இதில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீட்டின் கதவு முன்பு மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கதவு, ஜன்னல் போன்றவை எரிந்து சேதமாயின.

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஜெய்சங்கர், அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி அங்கு சிதறிக்கிடந்த வெடி குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.

    கடந்த ஊராட்சி மன்ற தேர்தலின்போது இவரது மனைவி தோல்வியடைந்தார். இது தொடர்பாக விஜயலட்சுமி தரப்புக்கும், தாமரைசெல்வன் தரப்புக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக விஜய லட்சுமிக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தாமரை செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.

    வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடைக்கு வந்த 2பேர் பானி பூரி சாப்பிட்டு உள்ளனர்.
    • பேக்கரிக்கு வந்து ‘மீதி சில்லறை வேண்டும்’ என்று தகராறு செய்துவிட்டு சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கொடுவாயை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 33). இவர் பெருந்தொழுவில் பேக்கரி வைத்துள்ளார். நேற்று மாலை இவரது கடைக்கு வந்த 2பேர் பானி பூரி சாப்பிட்டு உள்ளனர். அதில் உப்பு குறைவாக இருப்பதாக கூறி வாக்குவாதம் செய்துவிட்டு, பணத்தை வீசிவிட்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் மீண்டும் பேக்கரிக்கு வந்து 'மீதி சில்லறை வேண்டும்' என்று தகராறு செய்துவிட்டு சென்றனர்.

    பின் மீண்டும் கடைக்கு வந்த அவர்கள் பெட்ரோல் நிரப்பிவந்த மதுபாட்டிலை பேக்கரி மீது வீசியுள்ளனர். டீ குடிக்க வந்தவர்கள் அலறி அடித்து வெளியே வந்துள்ளனர். இதற்கிடையே இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். தீப்பற்றவைத்து பாட்டிலை வீசாததால் பெரும் சேதம் எதுவும் நடக்கவில்லை. அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்று விசாரிக்கின்றனர். அங்குள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×